"ஆளுமை:ரேகா, கோவிந்தராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=ரேகா| தந்தை=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
*[https://www.vallamai.com/?tag=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE வள்ளமை இணையத்தில் ரேகாவின் ஆக்கங்கள்] | *[https://www.vallamai.com/?tag=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE வள்ளமை இணையத்தில் ரேகாவின் ஆக்கங்கள்] | ||
*[https://www.youtube.com/watch?v=5X-CU7dPtxo வலைஒளியில் ரேகாவின் ஆக்கங்கள்] | *[https://www.youtube.com/watch?v=5X-CU7dPtxo வலைஒளியில் ரேகாவின் ஆக்கங்கள்] | ||
+ | *[http://www.importmirror.com/2017/12/blog-post_874.html இம்போர்ட்மிரர் இணையத்தில் ரேகா தொடர்பாக] | ||
*[https://polikaiyoorreka.blogspot.com/ பொலிகையூர்ரேகா வலைபூங்காவில் ரேகா தொடர்பான தகவல்கள்] | *[https://polikaiyoorreka.blogspot.com/ பொலிகையூர்ரேகா வலைபூங்காவில் ரேகா தொடர்பான தகவல்கள்] | ||
23:59, 1 மே 2020 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ரேகா |
தந்தை | கோவிந்தராசா |
தாய் | உதயமலர் |
பிறப்பு | 1990.03.14 |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | கல்வியியலாளர்,எழுத்தாளர், சமூகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ரேகா, கோவிந்தராசா வல்வெட்டித்துறையில் பிறந்த பன்முக பெண் ஆளுமை ஆவார். தற்பொழுது இந்தியாவில் தமிழகத்தின் திருச்சியில் வசிக்கின்றார். இவரது தந்தை கோவி்ந்தராசா; தாய் உதயமலர். ஆரம்பக் கல்வியை யாழ் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும் யாழ் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் சிறிதுகாலம் கல்விகற்ற இவர், உயர் கல்வியை தமிழகத்தில் தொடர்ந்தார்.
இளங்கலை வணிகவியல், முதுகலை வணிகவியல், வணிக ஆய்வியல், முதுகலை வணிக நிர்வாகவியல் ஆகிய பட்டங்களை தமிழகத்தின் திருச்சியில் உள்ள புனித சிலுவைத் தன்னாட்சிக்கல்லூரி, ஜமால் முகமதுகல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முடித்தார்.
பொலிகையூர் ரேகா என்ற பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், ஆய்வுநூல் ஆகியவற்றை எழுதி வருகின்றார். தனித்தமிழ் கொள்கையை பின்பற்றி எழுதி வரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். குருதிக் காடும் சூழலிசையும் (கவிதைத் தொகுப்பு), மனிதர்கள் காத்திருக்கிறார்கள் (சிறுகதைத்தொகுப்பு), சங்க இலக்கியங்களில் காந்தள் (ஆய்வுக் கட்டுரை), நினைவுகள் துணையாக (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். கருத்தரங்குகளிலும் பயிற்சிப்பட்டறைகளிலும், பல நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகவும் அமர்வுத் தலைவராகவும் கலந்துகொண்டுள்ளார். இவரது நேர்காணல்கள் வானொலி, பத்திரிகை, வலைஒளி ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சிறப்பு செயற்திட்டமொன்றையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். தற்போது இந்தியாவில் தமிழகத்தின் திருச்சியில் உள்ள ஜமால் முகமதுகல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.
விருதுகள்
15க்கும் மேற்பட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
புனித சிலுவைத் தன்னாட்சிக் கல்லூரி வழங்கிய – Best orator in Tamil என்ற பதக்கம்.
ஜமால் முகமதுகல்லூரியின் லியோ அமைப்பினர் வழங்கிய Best Social worker .
உலக ஐயைகள் குழுமத்தினர் வழங்கிய இளம் பன்முக ஆளுமையாளருக்கான ஐயை எழுசுடர் விருது.
வெளி இணைப்புக்கள்
- வலைஒளியில் ரேகாவின் ஆக்கங்கள்
- வள்ளமை இணையத்தில் ரேகாவின் ஆக்கங்கள்
- வலைஒளியில் ரேகாவின் ஆக்கங்கள்
- இம்போர்ட்மிரர் இணையத்தில் ரேகா தொடர்பாக
- பொலிகையூர்ரேகா வலைபூங்காவில் ரேகா தொடர்பான தகவல்கள்
குறிப்பு : மேற்படி பதிவு ரேகா, கோவிந்தராசா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.