"ஆளுமை:அனுஷ்திக்கா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=அனுஷ்திக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | '''அனுஷ்திக்கா'' (2000.03.30) மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிறந்த பெண் ஆளுமை. மட் களு/வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். தற்போது பல்கலைக்கழக நுழைவுக்காகக் காத்திருக்கிறார். தமிழ்பித்து, தமிழுராள் என்னும் புனை பெயர்களில் எழுதிவருகிறார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவர் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். | + | '''அனுஷ்திக்கா''' (2000.03.30) மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிறந்த பெண் ஆளுமை. மட் களு/வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். தற்போது பல்கலைக்கழக நுழைவுக்காகக் காத்திருக்கிறார். தமிழ்பித்து, தமிழுராள் என்னும் புனை பெயர்களில் எழுதிவருகிறார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவர் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர். |
பாடசாலைக்ககாலத்திலிருந்தே விவாதம், பேச்சு, கவிதை, இலக்கிய விமர்சனம், திறனாய்வு, சிறுகதை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பிரதேசம், மாவட்டம், தேசிய ரீதியான விவாதப்போட்டிகளில் பங்குகொண்டு பாடசாலை அணியைத் தலைமைதாங்கி வழிநடத்தியுள்ளார். | பாடசாலைக்ககாலத்திலிருந்தே விவாதம், பேச்சு, கவிதை, இலக்கிய விமர்சனம், திறனாய்வு, சிறுகதை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பிரதேசம், மாவட்டம், தேசிய ரீதியான விவாதப்போட்டிகளில் பங்குகொண்டு பாடசாலை அணியைத் தலைமைதாங்கி வழிநடத்தியுள்ளார். |
02:55, 13 ஏப்ரல் 2020 இல் கடைசித் திருத்தம்
பெயர் | அனுஷ்திக்கா |
பிறப்பு | 2000.03.30 |
ஊர் | மட்டக்களப்பு , வாழைச்சேனை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அனுஷ்திக்கா (2000.03.30) மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிறந்த பெண் ஆளுமை. மட் களு/வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். தற்போது பல்கலைக்கழக நுழைவுக்காகக் காத்திருக்கிறார். தமிழ்பித்து, தமிழுராள் என்னும் புனை பெயர்களில் எழுதிவருகிறார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவர் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர்.
பாடசாலைக்ககாலத்திலிருந்தே விவாதம், பேச்சு, கவிதை, இலக்கிய விமர்சனம், திறனாய்வு, சிறுகதை எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பிரதேசம், மாவட்டம், தேசிய ரீதியான விவாதப்போட்டிகளில் பங்குகொண்டு பாடசாலை அணியைத் தலைமைதாங்கி வழிநடத்தியுள்ளார்.
2017ஆம் ஆண்டு, 2018ஆம் ஆண்டுகளில் பாடசாலை மாணவர் பிரதமராகவும், 2017ஆம் ஆண்டு கல்குடா தேசிய மாணவர் பாராளுமன்றப் பிரதமராகவும் செயற்பட்டு தேசிய மாணவர் பாளுமன்றத்திற்குச் சென்றவராவார். பாடசாலையின் சிரேஷ்ட மாணவத் தலைவராகவும் பாரதி தமிழ் கழகத் தலைவராகவும் பாடசாலை இளைஞர் கழக தலைவராவும் செயற்பட்டவர். பாடசாலைக் கல்வியை முடித்தபின்னர் பிரத்தியேக வகுப்பில் ”தமிழ்மொழியும் இலக்கியமும்” என்னும் பாடத்தையும் மொழியின் தாற்பாரியத்தையும் கற்பித்து வருகின்றார். தற்பொழுது பிரதேச இளைஞர் கழகத்துடன் செயற்பட்டு வருகிறார். இவரின் முதல் சிறுகதையான ”யௌவனம்”, அனாமிகா கலை இலக்கிய மேம்பாட்டு மையம் நடாத்திய மாவட்ட கலை இலக்கிய போட்டியில் சிறப்பு இடத்தையும் சான்றிதழ் நினைவுச்சின்னம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டது. இவரின் சிறுகதைகள் பெண்ணிய அழுத்தங்களைக் கூடுதலாக பேசுகின்றது. பிரதேசசெயலகங்கள், 2018 வலயக்கல்வி அலுவலகங்கள், நடாத்திய விவாதப்போட்டிகளில் பங்கேற்று முதலாம் இடத்தைப்பெற்றுள்ளார். மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் தேசிய ரீதியாக நடாத்தும் சொற்கணை விவாதப் போட்டியில் பங்கேற்று 2017,2018 ஆம் ஆண்டுகளில் மாவட்டரீதியில் முதலாமிடம். விழுது மாவட்ட அமைப்பினால் நடாத்தப்பட்ட மாவட்ட விவாதச்சமர், மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப்பேரவையின் ஔவை அவை நடாத்தும் ”ஔவைவிழா 2020” இன் விவாதம் என்பவற்றில் முதல் இடம்.
தேசிய இலக்கிய விழா 2018ஆம் ஆண்டு கலாசார அலுவல்கள் திணைக்களம், கோறளைப்பற்று பிரதேச செயலகம் இணைந்து நடத்திய பிரதேச இலக்கியப் போட்டித் தொடரில் இலக்கிய விவரணம் போட்டியில் அடங்காப்பற்று வன்னியில் ஆதிகால தமிழர் வரலாறு என்ற நூலை விவரணப்படுத்தியமைக்காக திறந்தமட்டப் போட்டியில் முதலாமிடத்தை பெற்றமை விசேடமாகும்.
முகநூலில் தமிழ்பித்து அனுஷ்தி எனும் முகவரியில் எண்ணற்ற சமூக விழிப்புணர்வு, சமகால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையில் கவிதைகளை பதிவேற்றம் செய்கிறார். தனது கவிதைகளை நூல் வடிவில் கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியுள்ளார் 20 வயதுடைய இந்த இளம் பெண் ஆளுமை.
குறிப்பு : மேற்படி பதிவு அனுஷ்திக்கா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.