"ஆளுமை:பாத்திமா ஸிமாரா, அலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாத்திமா ஸி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 20: வரிசை 20:
 
* [http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_561.html பாத்திமா ஸிமாரா, அலி தொடர்பில் தொடர்பில் யாழ் முஸ்லிம் இணையத்தில்]
 
* [http://www.jaffnamuslim.com/2018/08/blog-post_561.html பாத்திமா ஸிமாரா, அலி தொடர்பில் தொடர்பில் யாழ் முஸ்லிம் இணையத்தில்]
 
* [http://www.kalpitiyavoice.com/2015/12/blog-post_420.htmlபாத்திமா ஸிமாரா, அலி தொடர்பில் கல்பிட்டியகுரல் இணையத்தில்]
 
* [http://www.kalpitiyavoice.com/2015/12/blog-post_420.htmlபாத்திமா ஸிமாரா, அலி தொடர்பில் கல்பிட்டியகுரல் இணையத்தில்]
 +
  
 
விருதுகள்
 
விருதுகள்

23:18, 18 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாத்திமா ஸிமாரா
தந்தை அப்துல் காதர்
தாய் தூ`பதுல் மஹ்கூமா
பிறப்பு 1984.03.21
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பாத்திமா ஸிமாரா, அலி கண்டி அக்குரணை சேர்ந்த எழுத்தாளர். ஊதாப்பூ எனும் புனைபெயரில் எழுதி வருகிறார். கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும், மடவளை மதீனா மத்திய கல்லூரியிலும் கற்றார். கணினி மென்பொருள் பட்டதாரியாவார் AMI பாடநெறியையும் பூர்த்தி செய்துள்ளார். இவரின் கணவர் அல். அஷ்ரபியா. ஐந்து பிள்ளைகளின் தாயுமாவார்.

ஸிமாரார பாலர் பாடசாலையின் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். நிறுவனம் ஒன்றில் உதவி முகாமையாளராக கடமையாற்றிய இவர் தற்பொழுது பாராளுமன்ற மறுசீரமைப்பு, வெகுசன ஊடக அமைச்சின் தகவல் திணைக்களத்தில் சமூகசேவை, மனித உரிமை பெண்களுக்கான நிர்வாக அதிகாரியாகவும் செயற்படுகின்றார்.

பாடசாலைக் காலத்திலேயே கவிதை, பேச்சு போட்டிகளில் பங்கு பற்றியுள்ளார். வானொலி கவிதை நிகழ்ச்சிகளிலும் இவரது கவிதைகள் ஒலிபரப்பட்டுள்ளன. தென்னிந்திய குறுந்திரைப்படம், விளம்பரப் படங்களுக்கு கவிதை எழுதியுள்ளார் இவரின் ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வானொலிகளிலும் வெளிவந்துள்ளன. ”கரையைத் தழுவும் அலைகள்” இவரின் முதலாவது நூல் 2017ஆம் ஆண்டு வெளிவந்தது. 2002ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இஸ்லாமிய மாநாடுகளில் பங்குபற்றி விருதும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


விருதுகள்

”ஈழக்குயில்”, ”சந்தக்கவி” விருது, ”கவித் தென்றல்” ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.