"ஆளுமை:திருநாவுக்கரசு மேரி, நவரத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
(வேறுபாடு ஏதுமில்லை)

23:31, 25 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் திருநாவுக்கரசு மேரி, நவரத்தினம்
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் பருத்தித்துறை
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு மேரி, நவரத்தினம் யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த இசைக் கலைஞர். 2000ஆம் ஆண்டு தற்செயலாக கொடிகாமம் அரசினர் பாடசாலையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் யாழ் ஜேம்ஸ் அன்ரன் இவரை இனம் கண்டு யாழ் இராகம்ஸ் குழுவில் இணைத்து கொண்டதன் மூலம் பல ரசிகர்களை இவர் பெற்றார். அன்றிலிருந்து இலங்கையிலுள்ள தமிழ் இசைக்குழுக்களில் பாடி வருகின்றார்.

இவர் பாடல், நடிப்பு, பின்னணிக் குரல் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இலங்கையின் முன்னனி தொலைக்காட்சிகளிலும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களுடனும் இசைப் பணியாற்றியுள்ளார். கொழும்பு சரத் விக்கிரம என்பவருடைய திரைப்படத்தில் பாடலைப் பாடி நடுவராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் பல நகைச்சுவை நாடகங்களிலும் நடித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு பிரதேச சபையினால் சாதனைப் பெண், புகழ் பூத்த சிறந்த பாடகி போன்ற பட்டங்களை பெற்றுள்ளதோடு இவரின் கலைச் சேவைக்காக காந்தக்குயில் என்ற பட்டத்தை இவர் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.