"ஆளுமை:புஸ்பராணி, திருச்செல்வம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:புஸ்பராணி திருச்செல்வம், ஆளுமை:புஸ்பராணி, திருச்செல்வம் என்ற தலைப்பு...) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை| |
பெயர்=புஸ்பராணி, திருச்செல்வம்| | பெயர்=புஸ்பராணி, திருச்செல்வம்| | ||
தந்தை=| | தந்தை=| | ||
வரிசை 19: | வரிசை 19: | ||
{{வளம்|7571|117}} | {{வளம்|7571|117}} | ||
{{வளம்|15444|98}} | {{வளம்|15444|98}} | ||
+ | |||
+ | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] |
03:49, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | புஸ்பராணி, திருச்செல்வம் |
பிறப்பு | 1949.12.09 |
ஊர் | நெல்லியடி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புஸ்பராணி, திருச்செல்வம் (1949.12.09 - ) யாழ்ப்பாணம், நெல்லியடியைப் பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட தவில் இசைக் கலைஞர். ஆரம்பத்தில் தனது தந்தையிடம் தவில் இசையைப் பயின்ற இவர், பின்னர் தவில் மேதைகளான மாணிக்கம்பிள்ளை, இணுவில் என். ஆர். சின்னராசா ஆகியோரிடம் தவிற் கலை பற்றிய நுட்பங்களைக் கற்றறிந்து கொண்டார்.
நாற்பது வருடங்களுக்கு மேலான தவிற் கலை அனுபவம் மிக்க இவர், யாழ்ப்பாண மாவட்டம் முழுவதுமாகத் தனது தவில் இசையை ஆற்றுகைப்படுத்தியுள்ளார். சிங்கப்பூர், மலேசியா முதலான வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளிற் பங்கு கொண்டு பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ள இவர், யாழ்ப்பாணத்தில் தவிலிசையை வாசித்த முதற் பெண்மணியாகக் கருதப்படுகின்றார்.
இவரது கலைப்பணியைப் பாராட்டிக் கரதிலக இசைச் செல்வி, தவில் இளவரசி ஆகிய பட்டங்களுடன் 2005 ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவை பொன்னாடை போர்த்திக் கௌரவித்துக் கலைஞானச்சுடர் விருதும் வழங்கப்பெற்றார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 117
- நூலக எண்: 15444 பக்கங்கள் 98