"ஆளுமை:நிவேதா துரைசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 24: வரிசை 24:
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 +
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]

01:36, 13 மே 2019 இல் நிலவும் திருத்தம்

பெயர் நிவேதா
தந்தை துரைசிங்கம்
தாய் பிலோமினா
பிறப்பு 1962.07.18
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நிவேதா துரைசிங்கம் (1975.07.18) யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை துரைசிங்கம்; தாய் பிலோமினா. ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையிலும் இடைநிலை கிளிநொச்சி உருத்திரபுரம் புனித பற்றிமா தமிழ்க்கலவன் பாடசாலையிலும் உயர்நிலைக் கல்வியை தெள்ளிப்பளை யூனியன் கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொது கலைமாணிப் பட்டத்தை பெற்றுள்ள எழுத்தாளர் கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுநாடக பிரதியாக்கம் என பன்முகத் திறமைகளைக்கொண்டவர். பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார் நிவேதா. தற்பொழுது முகநூலினை பெருமளவில் தனது எழுத்துத்துறைக்கான தளமாக கொண்டு செயற்பட்டு வருகிறார். வலம்புரி, ஜனனி, பாதுகாவலன் ஆகிய நாளிதழ்களிலும் இறையியல், ஒளி அரசி ஆகிய சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. எறும்பூறும் பாதைகள் என்ற கவிதைத் தொகுப்பை 2018ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள எழுத்தாளர் மேலும் இரண்டு நூல்களை வெளியிடத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கின்றார்.

விருதுகள்

முகநூல் குழுமத்தின் ஊடாக இவரின் கவிதைக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விருது.

இவரின் ஆக்கங்களுக்கு 250க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் பாராட்டுக்களும் கிடைத்துள்ளன.


குறிப்பு : மேற்படி பதிவு நிவேதா துரைசிங்கம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.