"ஆளுமை:றியாஸ் அகமட், அகமட் முகைதீன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=றியாஸ் அகமட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:12, 5 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம்

பெயர் றியாஸ் அகமட்
தந்தை அகமட் முகைதீன்
தாய் பரிதா
பிறப்பு -
ஊர் -
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றியாஸ் அகமட், அகமட் முகைதீன் ஓர் எழுத்தாளர்; விரிவுரையாளர்; ஆய்வாளர். இவரது தாய் பரிதா, தந்தை அகமட் முகைதீன். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமானி, விஞ்ஞான முதுமானி பட்டங்களும் தென்னாபிரிக்காவின் ஜொகன்னசுபேர்க் விற்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமானி பட்டமும் பெற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மீடத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.

அம்ரிதா ஏயெம் எனும் புனைபெயரில் எழுதும் இவர் சிறுகதை, நாடகம், கட்டுரை, விமர்சனங்கள் எழுதிவருகிறார். விலங்கு நடத்தைகள் அல்லது விலங்குகள் தொகுதி ஒன்று (சிறுகதைகள், 2001), ஊர்வனவற்றின் மதிப்பீடுகள் (2003), இலங்கை மீன்பிடி முறைகள் (2007), ஆற்றுவாழையைப் பயன்படுத்தி சேதனப்பசளை உற்பத்தி (2007), கண்டல் காடுகள் (2008), அனர்த்த முகாமைத்துவம் (2008), மனிதத் தலையீடுகளால் இலங்கையில் முருகைக் கற்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் (2008), உயிரினப் பல்வகைமையும் நாமும் (2010), சூழலும் சுரண்டலும் ஏகாதிபத்தியமும் (2016) போன்றவை இவரது நூல்கள்.

மருதமுனை புதுப்புனைவு இலக்கிய வட்டம், புதுப்புனைவு பதிப்பகம் போன்ற இலக்கியச் செயற்பாடுகளிலும் பங்களித்துள்ளார். அல்-மருதமுனை எனும் இதழின் உதவி ஆசிரியர்களில் ஒருவராகவும் உள்ளார்.

வளங்கள்

  • எங்கள் தேசம். 2017 மார்ச் 15-31