"ஆளுமை:கிங்ஸ்பரித் தேசிகர், தமோதரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 15: வரிசை 15:
  
 
இவர் இயேசு வரலாறு, இராமன் கதை, பாண்டவர் கதை, சாந்திரகாசம், கடவுள் வாழ்த்துப்பா, அகப்பொருட் குறள், Life of Jesus, Jesus of Nazareth ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.  
 
இவர் இயேசு வரலாறு, இராமன் கதை, பாண்டவர் கதை, சாந்திரகாசம், கடவுள் வாழ்த்துப்பா, அகப்பொருட் குறள், Life of Jesus, Jesus of Nazareth ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.  
 +
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:கிங்ஸ்பரி, பிரான்ஸிஸ்|இவரது நூல்கள்]]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|78-81}}
 
{{வளம்|963|78-81}}

04:16, 12 டிசம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிங்ஸ்பரித் தேசிகர்
தந்தை சி. வை. தமோதரம்பிள்ளை
தாய் நாகமுத்து அம்மை
பிறப்பு 1873.08.08
இறப்பு 1941.04.12
ஊர் சென்னை
வகை கல்வியியலாளர், சமயப்பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிங்ஸ்பரித் தேசிகர், தமோதரம்பிள்ளை (1873.08.08 - 1941.04.12) சென்னை, தண்டையார்பேட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர், சமயப்பெரியர். இவரது தந்தை சி. வை. தாமோதரம்பிள்ளை; தாய் நாகமுத்து அம்மை. அழகசுந்தரர் என்ற இயற் பெயரைக் கொண்ட இவர், உரிய காலத்தில் கல்வி கற்கத் தொடங்கினாரெனினும் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் மாறி மாறிச் சென்றமையால் கல்லூரி மாற்றம் காரணமாகக் கல்வி இடையிலே தடைப்பட்டது.

1898 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவிலுள்ள பசுமலைத் தேவாலயத்தில் உதவிப் போதகராக நியமனம் பெற்ற இவர், அடுத்த ஆண்டில் அத்தேவாலயத்தின் தேசிகராக அபிடேகம் பெற்றார். 1926 ஆம் ஆண்டு முதல் கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமனம் பெற்றார். இவர் கொழும்பில் வசித்த காலத்தில் தேவாலயங்களிலும் நண்பர்கள் பலரது வீட்டிலும் போதனைகளை நடாத்தியதோடு வானொலியிலும் போதனை செய்தார். விவேகானந்தா சபை - இராமகிருஷ்ண மிஷன் - அன்பு மார்க்க சங்கம் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றிக் கல்வி வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்குமாக உழைத்தார்.

இவர் இயேசு வரலாறு, இராமன் கதை, பாண்டவர் கதை, சாந்திரகாசம், கடவுள் வாழ்த்துப்பா, அகப்பொருட் குறள், Life of Jesus, Jesus of Nazareth ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 78-81