"ஆளுமை:கங்காதரன், மயில்வாகனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கங்காதரன், மயில்வாகனம் | + | கங்காதரன், மயில்வாகனம் (1910 - 1994) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை மயில்வாகனம். இவர் சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணியதோடு திருவுருவங்களைக் கண்ணாடியில் வரைவதில் பெயர் பெற்று விளங்கியவர். இவர் கொழும்பு தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்றதோடு, திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் சிறிதுகாலம் கைப்பணிப் போதனாசிரியராகக் கடமையாற்றினார். |
தெய்வத் திருவுருவங்கள் வரைதல், கோயிற் திரைச்சீலைகள் வரைதல், கண்ணாடியில் வரைதல் எனச் சமயம் சார்ந்த ஓவியக்கலையில் ஈடுபட்டு அதனையே தன் சீவனோபாயத் தொழிலாகக் கொண்டதால் தனது ஆக்கங்கள் எதனையும் சேகரிப்பில் வைத்திருக்கவில்லை. கோப்பாய் கந்தசுவாமி கோயில், நீர்வேலி கந்தசுவாமி கோயில் தேர்மூட்டி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கோபுரவாயில், தேர்முட்டிக்கருகாமையில் உள்ளமடம் என்பவற்றிலுள்ள சுவரோவியங்கள் இவரால் வரையப்பட்டவை. | தெய்வத் திருவுருவங்கள் வரைதல், கோயிற் திரைச்சீலைகள் வரைதல், கண்ணாடியில் வரைதல் எனச் சமயம் சார்ந்த ஓவியக்கலையில் ஈடுபட்டு அதனையே தன் சீவனோபாயத் தொழிலாகக் கொண்டதால் தனது ஆக்கங்கள் எதனையும் சேகரிப்பில் வைத்திருக்கவில்லை. கோப்பாய் கந்தசுவாமி கோயில், நீர்வேலி கந்தசுவாமி கோயில் தேர்மூட்டி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கோபுரவாயில், தேர்முட்டிக்கருகாமையில் உள்ளமடம் என்பவற்றிலுள்ள சுவரோவியங்கள் இவரால் வரையப்பட்டவை. |
04:24, 5 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கங்காதரன் |
தந்தை | மயில்வாகனம் |
பிறப்பு | 1910 |
இறப்பு | 1994 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கங்காதரன், மயில்வாகனம் (1910 - 1994) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை மயில்வாகனம். இவர் சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணியதோடு திருவுருவங்களைக் கண்ணாடியில் வரைவதில் பெயர் பெற்று விளங்கியவர். இவர் கொழும்பு தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்றதோடு, திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் சிறிதுகாலம் கைப்பணிப் போதனாசிரியராகக் கடமையாற்றினார்.
தெய்வத் திருவுருவங்கள் வரைதல், கோயிற் திரைச்சீலைகள் வரைதல், கண்ணாடியில் வரைதல் எனச் சமயம் சார்ந்த ஓவியக்கலையில் ஈடுபட்டு அதனையே தன் சீவனோபாயத் தொழிலாகக் கொண்டதால் தனது ஆக்கங்கள் எதனையும் சேகரிப்பில் வைத்திருக்கவில்லை. கோப்பாய் கந்தசுவாமி கோயில், நீர்வேலி கந்தசுவாமி கோயில் தேர்மூட்டி, நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கோபுரவாயில், தேர்முட்டிக்கருகாமையில் உள்ளமடம் என்பவற்றிலுள்ள சுவரோவியங்கள் இவரால் வரையப்பட்டவை.
கொழும்பு கலாபவனத்தில் இவரது விநாயகர் திருவுருவச் திரைச்சீலையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மரபுவழி ஓவியத்தில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களில் முதலிடத்தைப் பெறுகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 20-21