"ஆளுமை:அகிலேசசர்மா, சிதம்பரநாதையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | அகிலேசசர்மா, சிதம்பரநாதையர் (1893.03.21 - 1953.02.26) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மண்டைதீவு திருவெண்காடு விநாயகர் கோவில் | + | அகிலேசசர்மா, சிதம்பரநாதையர் (1893.03.21 - 1953.02.26) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மண்டைதீவு திருவெண்காடு விநாயகர் கோவில் அருகாமையை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிடர், புலவர். இவரது தந்தை சிதம்பரநாதையர். இவர் மண்டைதீவில் ஒரு சைவப் பாடசாலையை நிறுவினார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் வசித்த சுப்பிரமணிய ஐயரைத் தனது குருவாகக் கொண்டு சமய சாஸ்திரங்களைக் கற்றறிந்தார். |
− | இவர் பாடிய ''பண்ணைப் பாலக் கும்மிகள்'' முக்கியமானவை. இது தீவகத்தையும் யாழ்ப்பாண நகரையும் இணைத்து பண்ணைக் கடலுக்குள் போடப்பட்டிருக்கும் தாம்போதினி பாலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாடப்பட்டது. இவர் இன்னும் சில கும்மிப் பாடல்களை இயற்றியதுடன் சோதிட வினாவிடை என்ற சோதிட நூலையும் திருவெண்காட்டந்தாதி | + | கவிபாடுவதில் வல்லவரான இவர் பாடிய ''பண்ணைப் பாலக் கும்மிகள்'' முக்கியமானவை. இது தீவகத்தையும் யாழ்ப்பாண நகரையும் இணைத்து பண்ணைக் கடலுக்குள் போடப்பட்டிருக்கும் தாம்போதினி பாலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாடப்பட்டது. இவர் இன்னும் சில கும்மிப் பாடல்களை இயற்றியதுடன் சோதிட வினாவிடை என்ற சோதிட நூலையும் திருவெண்காட்டந்தாதி, மதுரை மீனாட்சி பேரின்பக் கீர்த்தனை, முருகன் கீர்த்தனைப் பதிகம், தற்கால நாகரிக வேடிக்கைப்பாக்கள், தெய்வாராதனை விளக்கம் போன்ற பல நூல்களை எழுதினார். |
==இவற்றையும் பார்க்கவும்== | ==இவற்றையும் பார்க்கவும்== |
04:26, 23 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அகிலேசசர்மா |
தந்தை | சிதம்பரநாதையர் |
பிறப்பு | 1893.03.21 |
இறப்பு | 1953.02.26 |
ஊர் | மண்டைதீவு |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அகிலேசசர்மா, சிதம்பரநாதையர் (1893.03.21 - 1953.02.26) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மண்டைதீவு திருவெண்காடு விநாயகர் கோவில் அருகாமையை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிடர், புலவர். இவரது தந்தை சிதம்பரநாதையர். இவர் மண்டைதீவில் ஒரு சைவப் பாடசாலையை நிறுவினார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் வசித்த சுப்பிரமணிய ஐயரைத் தனது குருவாகக் கொண்டு சமய சாஸ்திரங்களைக் கற்றறிந்தார்.
கவிபாடுவதில் வல்லவரான இவர் பாடிய பண்ணைப் பாலக் கும்மிகள் முக்கியமானவை. இது தீவகத்தையும் யாழ்ப்பாண நகரையும் இணைத்து பண்ணைக் கடலுக்குள் போடப்பட்டிருக்கும் தாம்போதினி பாலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாடப்பட்டது. இவர் இன்னும் சில கும்மிப் பாடல்களை இயற்றியதுடன் சோதிட வினாவிடை என்ற சோதிட நூலையும் திருவெண்காட்டந்தாதி, மதுரை மீனாட்சி பேரின்பக் கீர்த்தனை, முருகன் கீர்த்தனைப் பதிகம், தற்கால நாகரிக வேடிக்கைப்பாக்கள், தெய்வாராதனை விளக்கம் போன்ற பல நூல்களை எழுதினார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 09