"ஆளுமை:ஜெமீல், சாகுல் ஹமீத்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ஜெமீல், எஸ். எச். எம்., ஆளுமை:ஜெமீல், சாகுல் ஹமீத் என்ற தலைப்புக்கு நகர்த்...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:39, 22 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஜெமீல் |
தந்தை | சாகுல் ஹமீத் |
தாய் | முக்குலத் உம்மா |
பிறப்பு | 1940.11.21 |
ஊர் | சாய்ந்தமருது |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜெமீல், சாகுல் ஹமீத் (1940.11.21 - ) அம்பாறை, சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாகுல் ஹமீத்; தாய் முக்குலத் உம்மா. காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி, கொழும்பு சாஹிராக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொருளியற் பாடத்தில் சிறப்புப் பட்டமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை முதுமாணிப் பட்டமும் பெற்றார். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை டிப்ளோமாப் பட்டமும் பெற்றுள்ளார்.
இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் போதனாசிரியராகவும் 'அருணாசலம் ஹோல்' உதவி விடுதிக் காப்பாளராகவும் பணியாற்றியதுடன் கல்லூரி ஆசிரியராக, அதிபராக, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிபராக, வட்டாரக் கல்வி அதிகாரியாக, பிரதம கல்வி அதிகாரியாக, பரீட்சைத் திணைக்கள உதவி ஆணையாளராக, மட்டக்களப்புக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளராக, முஸ்லிம் சமய, கலாச்சார அமைச்சின் செயலாளராக, கல்வி- கலாச்சார விவகாரங்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளராக, கலாச்சார- சமய விவகார அமைச்சின் ஆலோசகராக எனப் பல பதவிகளை வகித்துள்ளார்.
இவரது முதல் ஆக்கமான 'எனது ஊர்' 'தினகரன் ஞாயிறு பாலர் கழகப் பகுதியில்' 1949 இல் வெளிவந்தது. இவர் எ.எம்.எ.அஸீஸ் அவர்களின் கல்விச் சிந்தனைகளும் பங்களிப்பும், சேர். ராஸிக் பரீத் அவர்களின் கல்விப்பணி, சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வரலாறு, கல்விச் சிந்தனைகள், நினைவில் நால்வர், கலாநிதி ஜாயாவின் கல்விப் பணிகள், சுவடி ஆற்றுப்படை - முதலாம் பாகம், சுவடி ஆற்றுப்படை - இரண்டாம் பாகம், கிராமத்து இதயம் - நாட்டார் பாடல்கள், இஸ்லாமியக் கல்வி உட்படப் பல நூல்களையும் பொது நிதியியல், துவான் புர்ஹானுத்தீன் ஜாயா ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவர் தமிழ்மாமணி என்ற பட்டத்தையும் பல விருதுகளையும் கேடயங்களையும் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1857 பக்கங்கள் 09-17
- நூலக எண்: 13946 பக்கங்கள் 03-05