"ஆளுமை:வைத்தியலிங்கம், சங்கரப்பிள்ளை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(வேறுபாடு ஏதுமில்லை)

02:21, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் வைத்தியலிங்கம்பிள்ளை
தந்தை சங்கரப்பிள்ளை
பிறப்பு 1843
இறப்பு 1901
ஊர் வல்வெட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வைத்தியலிங்கம்பிள்ளை, சங்கரப்பிள்ளை (1843 - 1901) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சங்கரப்பிள்ளை. இவர் கண்டனங்கள், செய்யுட்களை இயற்றி அச்சிட்டு வெளியிட்டதுடன் "சைவாபிமானி" என்னும் பெயரில் ஒரு பத்திரிகையை நடாத்தியுள்ளார். இவர் சிந்தாமணி நிகண்டு, செல்வச்சந்நிதி முறை, வல்வை வைத்தியேசர் பதிகம், சாதிநிர்ணய புராணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். உடுப்பிட்டி சிவசம்பு புலவரின் மாணாக்கர். இவர் பாரதி நிலைய முத்திராட்சகசாலை என்ற அச்சகத்தை நிறுவியதோடு, ஒரு தமிழ் பாடசாலையையும் நடத்தினார். 1878 இல் "நம்பியகப் பொருள்" என்ற இலக்கண நூலுக்கு விளக்கம் எழுதினார். சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் எழுதிய "சைவமகத்துவம்" நூலுக்கு எழுந்த கண்டனங்களை மறுத்து "சைவமகத்துவ பானு" எழுதியவர். இயற்றமிழ்போதகாசிரியர் என்னும் பெயரால் அறியப்பட்டவர்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 230
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 80-82


வெளி இணைப்புக்கள்