"ஆளுமை:நாகம்மா, மகாலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:நாகம்மா மகாலிங்கம், ஆளுமை:நாகம்மா, மகாலிங்கம் என்ற தலைப்புக்கு நகர்த்...)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:34, 2 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நாகம்மா, மகாலிங்கம்
பிறப்பு 1946.03.22
ஊர் மந்துவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகம்மா, மகாலிங்கம் (1946.03.22 - ) யாழ்ப்பாணம், மந்துவிலைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட கர்நாடக இசைக் கலைஞர். இவர் ஆரம்பக் கல்வியை மந்துவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் வரணி மகா வித்தியாலயத்திலும் கற்றுப் பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மூன்று ஆண்டுகள் கற்று, பயிற்றப்பட்ட இசை ஆசிரியராக வெளியேறினார். இவர் ஈழத்தின் புகழ் பூத்த நடனக் கலைஞர் லீலா நாராயணனின் மாணவியாவார்.

இவர் சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, கோவலன் கண்ணகி, அரிச்சந்திர மயான கண்டம் போன்ற இசை நாடகங்களில் நடித்திருப்பதுடன் இந்நாடகப் பாடல்களைத் தாமே இசையமைத்துப் பாடி நடித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலிக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்ட இவர், 1981 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இசைக் கச்சேரி, திருமுறைப் பாடல்கள், பண்ணிசைப் பாமாலை, பக்த ரஞ்சனி போன்ற நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 107