"ஆளுமை:நமசிவாயம், அருணாசலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=நமசிவாயம்|
 
பெயர்=நமசிவாயம்|
 
தந்தை=அருணாசலம்|
 
தந்தை=அருணாசலம்|

01:44, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நமசிவாயம்
தந்தை அருணாசலம்
பிறப்பு 1925.02.17
இறப்பு 2013.12.17
ஊர் நல்லூர்
வகை ஆசிரியர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நமசிவாயம், அருணாசலம் (1925.02.17 - 2013.12.17) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், கலைஞர். இவரது தந்தை அருணாசலம். இவர் இந்தியாவின் கோயம்பத்தூர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலும் ஆசிரியப் பயிற்சி பெற்றுப் புவியியல், தமிழ் ஆகிய பாடங்களில் முதன்மைத் தேர்ச்சி பெற்றவர்.

இவர் புல்லாங்குழல் இசைப்பதில் ஆற்றல் பெற்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முதற்தரப் புல்லாங்குழல் இசையாளராக விளங்கியவர். இவர் இந்தியாவிலும் இலங்கையிலும் சிறந்த பல சங்கீத வித்துவான்களுக்குப் புல்லாங்குழல் இசையைப் பின்னணி இசையாக வழங்கியுள்ளார். இவர் பிரான்சில் வசித்த காலத்தில் அங்குள்ள தமிழ் ஊடகமொன்றில் நேரடியாகப் புல்லாங்குழல் இசையை வழங்கிப் பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்டார்.

இவர் இந்திய வீணை இசைக்கலைஞரான பாலச்சந்திரரின் பாராட்டுதல்களைப் பெற்றதுடன் வேணுகானமணி, வேய்ங்குழல் வேந்தன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 82