"ஆளுமை:கனகசபைப்பிள்ளை, விஸ்வநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=கனகசபைப்பிள்ளை| | பெயர்=கனகசபைப்பிள்ளை| | ||
தந்தை=விஸ்வநாதப்பிள்ளை| | தந்தை=விஸ்வநாதப்பிள்ளை| |
22:10, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கனகசபைப்பிள்ளை |
தந்தை | விஸ்வநாதப்பிள்ளை |
பிறப்பு | 1855.05.25 |
இறப்பு | 1906.02.21 |
ஊர் | மல்லாகம் |
வகை | ஆய்வாளர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கனகசபைப்பிள்ளை, விஸ்வநாதப்பிள்ளை (1855.05.25-1906.02.21) யாழ்ப்பாணம், மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இலக்கிய ஆய்வாளர், எழுத்தாளர். இவரது தந்தை விஸ்வநாதப்பிள்ளை. இவர் சென்னை அரச கல்லூரியில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்ற இவர், சென்னை அஞ்சற் துறையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றினார். சட்டப்பரீட்சையிலும் சித்திபெற்றுச் சிறிதுகாலம் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழர் வரலாறு ஆகியவற்றை ஆராய்ந்து அவை தொடர்பில் ஆங்கிலத்தில் பல கட்டுரைகளை 'இந்திய புராதன கலைஞன்' பத்திரிகையில் எழுதிவந்ததோடு நூல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் இவர் மொழிபெயர்த்த நூல்களில் களவழி நாற்பது, கலிங்கத்துப் பரணி, விக்கிரம சோழன் உலா குறிப்பிடத்தக்கனவாகும். சென்னையில் இருந்து வெளிவந்த "மட்ராஸ் ரிவியூ" என்னும் ஆங்கில இதழொன்றில் தமிழர் வரலாறு பற்றித் தொடர்ச்சியாக இவர் எழுதிய கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் (The Tamils 1800 Years Ago) என்னும் தலைப்பில் ஆங்கில நூலாக வெளிவந்தது. இதன் மூலம் தமிழ் வரலாறு குறித்து முதன் முதலில் முறையான காலவரலாற்று ஆய்வை நிகழ்த்தியவர் என்ற பெருமையைப் பெறுகின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 85
- நூலக எண்: 936 பக்கங்கள் 68-70
- நூலக எண்: 13816 பக்கங்கள் 119-127