"ஆளுமை:பஞ்சாபிகேசன், முருகப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 11: வரிசை 11:
  
பஞ்சாபிகேசன், முருகப்பா (1924.07.01 - 2015.07.26) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை முருகப்பா; தாய் சின்னப்பிள்ளை. சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் நாதஸ்வரக் கலைஞர்கள் சண்முகலிங்கம்பிள்ளை, அப்புலிங்கம்பிள்ளை, இராமையாபிள்ளை, பி. எஸ். கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் நாதஸ்வர இசையைப் பயின்று தனது 15வது வயதில் முதற் கச்சேரியை பருத்தித்துறை சித்திவிநாயகர் ஆலயத்தில் அரங்கேற்றினார்.
+
பஞ்சாபிகேசன், முருகப்பா (1924.07.01 - 2015.07.26) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை முருகப்பா; இவரது தாய் சின்னப்பிள்ளை. இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்று நாதஸ்வரக் கலைஞர்களான சண்முகலிங்கம்பிள்ளை, அப்புலிங்கம்பிள்ளை, இராமையாபிள்ளை, பி. எஸ். கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் நாதஸ்வர இசையைப் பயின்று தனது 15 ஆவது வயதில் முதற் கச்சேரியை பருத்தித்துறை சித்திவிநாயகர் ஆலயத்தில் அரங்கேற்றினார்.
  
பின்னர் இவர் தமிழ்நாடு சென்று நாதஸ்வரக் கலைஞர் “கக்காயி” நடராஜசுந்தரம் பிள்ளையிடமும் ஐயம்பேட்டை வேணுகோபால் பிள்ளையிடமும் பயின்று மரபுவழிக்கச்சேரி செய்யும் முறைமையினைப் பயின்று கொண்டார். இவர் திருவாரூர் டி. என். ராஜரத்தினம் பிள்ளை, திருவாரூர் லெச்சையப்பா, அம்பல் இராமச்சந்திரன், பந்தனை நல்லூர் தெட்சணாமூர்த்திப்பிள்ளை, கோட்டூர் இராஜரத்தினம்பிள்ளை போன்ற தமிழகக் கலைஞர்களுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்துள்ளார்.  மேலும் ஈழத்து தவில் கலைஞர்கள் வி. தெட்சணாமூர்த்தி, என். ஆர். சின்னராசா எனப் பலரும் இவருக்கு தவில் வாசித்திருக்கிறார்கள்.
+
இவர் தமிழ்நாடு சென்று நாதஸ்வரக் கலைஞர் “கக்காயி” நடராஜசுந்தரம் பிள்ளையிடமும் ஐயம்பேட்டை வேணுகோபால் பிள்ளையிடமும் பயின்று மரபுவழிக்கச்சேரி செய்யும் முறைமையினைப் பயின்று கொண்டார். இவர் திருவாரூர் டி. என். ராஜரத்தினம் பிள்ளை, திருவாரூர் லெச்சையப்பா, அம்பல் இராமச்சந்திரன், பந்தனை நல்லூர் தெட்சணாமூர்த்திப்பிள்ளை, கோட்டூர் இராஜரத்தினம்பிள்ளை போன்ற தமிழகக் கலைஞர்களுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்துள்ளார்.  மேலும் ஈழத்துத் தவிற் கலைஞர்கள் வி. தெட்சணாமூர்த்தி, என். ஆர். சின்னராசா எனப் பலரும் இவருக்கு தவில் வாசித்திருக்கிறார்கள்.
  
அகில இலங்கை கம்பன் கழகத்தின் “இசைப்பேரறிஞர்” விருது, இலங்கை கலாசார அமைச்சின் “கலாபூஷணம்” விருது, யாழ்ப்பாணம் இந்து கலாசார சபையின் “சிவகலாபூஷணம்” விருது, 1998இல் வடகிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது ஆகிய விருதுகளையும் திருக்கேதீச்சரத் தேவஸ்தானத்தின் “இசைவள்ளல் நாதஸ்வரகலாமணி” பட்டம், இலங்கை கல்வி அமைச்சின் “நாதஸ்வர கானவாரிதி” பட்டம், இந்து கலாசார அமைச்சின் “ஸ்வரஞானதிலகம்” பட்டம், 2010 அக்டோபர் 6 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் பட்டம் ஆகிய பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார்.
+
இவர் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் “இசைப்பேரறிஞர்” விருது, இலங்கை கலாச்சார அமைச்சின் “கலாபூஷணம்” விருது, யாழ்ப்பாணம் இந்து கலாச்சார சபையின் “சிவகலாபூஷணம்” விருது, 1998 இல் வடகிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது ஆகிய விருதுகளையும் திருக்கேதீச்சரத் தேவஸ்தானத்தின் “இசைவள்ளல் நாதஸ்வரகலாமணி” பட்டம், இலங்கை கல்வி அமைச்சின் “நாதஸ்வர கானவாரிதி” பட்டம், இந்து கலாச்சார அமைச்சின் “ஸ்வரஞானதிலகம்” பட்டம், 2010 அக்டோபர் 6 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் பட்டம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

01:09, 16 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பஞ்சாபிகேசன்
தந்தை முருகப்பா
தாய் சின்னப்பிள்ளை
பிறப்பு 1924.07.01
இறப்பு 2015.07.26
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சாபிகேசன், முருகப்பா (1924.07.01 - 2015.07.26) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை முருகப்பா; இவரது தாய் சின்னப்பிள்ளை. இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி கற்று நாதஸ்வரக் கலைஞர்களான சண்முகலிங்கம்பிள்ளை, அப்புலிங்கம்பிள்ளை, இராமையாபிள்ளை, பி. எஸ். கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் நாதஸ்வர இசையைப் பயின்று தனது 15 ஆவது வயதில் முதற் கச்சேரியை பருத்தித்துறை சித்திவிநாயகர் ஆலயத்தில் அரங்கேற்றினார்.

இவர் தமிழ்நாடு சென்று நாதஸ்வரக் கலைஞர் “கக்காயி” நடராஜசுந்தரம் பிள்ளையிடமும் ஐயம்பேட்டை வேணுகோபால் பிள்ளையிடமும் பயின்று மரபுவழிக்கச்சேரி செய்யும் முறைமையினைப் பயின்று கொண்டார். இவர் திருவாரூர் டி. என். ராஜரத்தினம் பிள்ளை, திருவாரூர் லெச்சையப்பா, அம்பல் இராமச்சந்திரன், பந்தனை நல்லூர் தெட்சணாமூர்த்திப்பிள்ளை, கோட்டூர் இராஜரத்தினம்பிள்ளை போன்ற தமிழகக் கலைஞர்களுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்துள்ளார். மேலும் ஈழத்துத் தவிற் கலைஞர்கள் வி. தெட்சணாமூர்த்தி, என். ஆர். சின்னராசா எனப் பலரும் இவருக்கு தவில் வாசித்திருக்கிறார்கள்.

இவர் அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் “இசைப்பேரறிஞர்” விருது, இலங்கை கலாச்சார அமைச்சின் “கலாபூஷணம்” விருது, யாழ்ப்பாணம் இந்து கலாச்சார சபையின் “சிவகலாபூஷணம்” விருது, 1998 இல் வடகிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது ஆகிய விருதுகளையும் திருக்கேதீச்சரத் தேவஸ்தானத்தின் “இசைவள்ளல் நாதஸ்வரகலாமணி” பட்டம், இலங்கை கல்வி அமைச்சின் “நாதஸ்வர கானவாரிதி” பட்டம், இந்து கலாச்சார அமைச்சின் “ஸ்வரஞானதிலகம்” பட்டம், 2010 அக்டோபர் 6 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கௌரவ கலாநிதிப் பட்டம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 575-576
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 90