"ஆளுமை:ஜெயசீலன், தனபாலசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | ஜெயசீலன், தனபாலசிங்கம் (1973.03.05) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை தனபாலசிங்கம்; தாய் மேனகா. இவர் ஆரம்பக் கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும் | + | ஜெயசீலன், தனபாலசிங்கம் (1973.03.05-) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை தனபாலசிங்கம்; இவரது தாய் மேனகா. இவர் ஆரம்பக் கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும் பின் யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடத்திற் பயின்று, 2000 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு 2007 இல் யாழ். பல்கலைக்கழகத்தில் ‘குடிசன அபிவிருத்தியில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். |
− | உடுவில் மகளிர் கல்லூரி, விசுவமடு மத்திய மகா வித்தியாலயம், பளை மத்திய கல்லூரி என்பவற்றில் உயிரியல் | + | உடுவில் மகளிர் கல்லூரி, விசுவமடு மத்திய மகா வித்தியாலயம், பளை மத்திய கல்லூரி என்பவற்றில் உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 2001 இல் நடந்த இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்திபெற்று நிர்வாக சேவையில் இணைந்து கொண்டதோடு தற்போது பருத்தித்துறைப் பிரதேசச் செயலாளராகப் பணியாற்றுகின்றார். இயல்பாகக் கவிதையில் ஈடுபாடு கொண்ட இவர், 1992 இல் யாழ். இந்துக் கல்லூரி உயர்தர மாணவர் மன்ற நிகழ்வுக்காகக் கவிதை எழுதினார். தற்சமயம் மூவாயிரத்து அறுநூறு வரையான கவிதைகளை இயற்றியுள்ளார். சாளரம் சஞ்சிகையில் முதலில் இவரது கவிதை வெளிவந்ததுடன் அதன்பின் சிரித்திரன் சஞ்சிகையிலும் வந்தது. 1995 இல் அ.யேசுராசாவின் ‘கவிதை’ இதழால் நடாத்தப்பட்ட ‘மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டியில்' இவரது கவிதை முதற்பரிசைப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக இவரது பேட்டியொன்றைக் கவிதை இதழ் பிரசுரித்தது. 1995 இல் வலிகாமம் இடப்பெயர்வு, மீள்குடியேற்றத்தின் பின் பல பத்திரிகைகள், ஈழத்தின் அனேகமான சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலியின் இதயசங்கமம், கவிதைக்கலசம் போன்ற நிகழ்ச்சிகளில் இவரது கவிதைகள் வாசிக்கப்பட்டதோடு பல்கலைக்கழகக் காலத்தில் மூன்று ஆண்டுகளும் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மட்ட போட்டிகளில் சிறந்த கவிஞனாகத் தெரியப்பட்டார். |
− | + | இதுவரை இவரது நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘கனவுகளின் எல்லை’என்ற தொகுப்பு 2001 இல் வெளிவந்தது. வடகிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்ட சிறந்த கவிதைத் தொகுதிக்கான விருதை இது பெற்றது. ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ 2004 இல் வெளிவந்து இலக்கியப் பேரவைப் பரிசைப் பெற்றது. இத்தொகுப்பு 2004 இல் வெளிவந்ததில் ‘சிறந்த கவிதைத் தொகுதி’ என 26.12.2004 ஆம் திகதி வெளிவந்த ‘ஆனந்தவிகடன்’ சஞ்சிகையில் ‘சிறந்தவை 2004' பகுதியில் தமிழக எழுத்தாளர் அமரர் ‘சுஜாதா’ இதனைத் தெரிவு செய்து இருந்தார். மூன்றாவது தொகுப்பு ‘எழுதாத ஒரு கவிதை’ 2013 இல் வெளிவந்தது. நான்காவது தொகுப்பு ''புயல் மழைக்கு பின்னான பொழுது'' 2014 இல் வெளிவந்தது. பிரசுரமாகாத ஆயிரக்கணக்கான கவிதைகள் உள்ளன. நல்லூர் பிரதேச கீதம், காரைநகர் பிரதேச கீதம், பூநகரிப் பிரதேச கீதம், தெல்லிப்பளை பிரதேச கீதம், மருதங்கேணி பிரதேச கீதம் என்பன இவரால் இயற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. | |
− | |||
− | இதுவரை இவரது நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘கனவுகளின் எல்லை’என்ற தொகுப்பு 2001 இல் வெளிவந்தது. வடகிழக்கு | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== |
22:29, 29 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | ஜெயசீலன் |
தந்தை | தனபாலசிங்கம் |
தாய் | மேனகா |
பிறப்பு | 1973.03.05 |
ஊர் | நல்லூர் |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜெயசீலன், தனபாலசிங்கம் (1973.03.05-) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை தனபாலசிங்கம்; இவரது தாய் மேனகா. இவர் ஆரம்பக் கல்வியை நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்திலும் பின் யாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் உயிரியல் பாடத்திற் பயின்று, 2000 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்டத்தைப் பெற்றதோடு 2007 இல் யாழ். பல்கலைக்கழகத்தில் ‘குடிசன அபிவிருத்தியில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பெற்றார்.
உடுவில் மகளிர் கல்லூரி, விசுவமடு மத்திய மகா வித்தியாலயம், பளை மத்திய கல்லூரி என்பவற்றில் உயிரியல் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 2001 இல் நடந்த இலங்கை நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்திபெற்று நிர்வாக சேவையில் இணைந்து கொண்டதோடு தற்போது பருத்தித்துறைப் பிரதேசச் செயலாளராகப் பணியாற்றுகின்றார். இயல்பாகக் கவிதையில் ஈடுபாடு கொண்ட இவர், 1992 இல் யாழ். இந்துக் கல்லூரி உயர்தர மாணவர் மன்ற நிகழ்வுக்காகக் கவிதை எழுதினார். தற்சமயம் மூவாயிரத்து அறுநூறு வரையான கவிதைகளை இயற்றியுள்ளார். சாளரம் சஞ்சிகையில் முதலில் இவரது கவிதை வெளிவந்ததுடன் அதன்பின் சிரித்திரன் சஞ்சிகையிலும் வந்தது. 1995 இல் அ.யேசுராசாவின் ‘கவிதை’ இதழால் நடாத்தப்பட்ட ‘மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டியில்' இவரது கவிதை முதற்பரிசைப் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக இவரது பேட்டியொன்றைக் கவிதை இதழ் பிரசுரித்தது. 1995 இல் வலிகாமம் இடப்பெயர்வு, மீள்குடியேற்றத்தின் பின் பல பத்திரிகைகள், ஈழத்தின் அனேகமான சஞ்சிகைகளில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. இலங்கை வானொலியின் இதயசங்கமம், கவிதைக்கலசம் போன்ற நிகழ்ச்சிகளில் இவரது கவிதைகள் வாசிக்கப்பட்டதோடு பல்கலைக்கழகக் காலத்தில் மூன்று ஆண்டுகளும் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மட்ட போட்டிகளில் சிறந்த கவிஞனாகத் தெரியப்பட்டார்.
இதுவரை இவரது நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘கனவுகளின் எல்லை’என்ற தொகுப்பு 2001 இல் வெளிவந்தது. வடகிழக்கு மாகாணக் கல்விப் பண்பாட்டலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்ட சிறந்த கவிதைத் தொகுதிக்கான விருதை இது பெற்றது. ‘கைகளுக்குள் சிக்காத காற்று’ 2004 இல் வெளிவந்து இலக்கியப் பேரவைப் பரிசைப் பெற்றது. இத்தொகுப்பு 2004 இல் வெளிவந்ததில் ‘சிறந்த கவிதைத் தொகுதி’ என 26.12.2004 ஆம் திகதி வெளிவந்த ‘ஆனந்தவிகடன்’ சஞ்சிகையில் ‘சிறந்தவை 2004' பகுதியில் தமிழக எழுத்தாளர் அமரர் ‘சுஜாதா’ இதனைத் தெரிவு செய்து இருந்தார். மூன்றாவது தொகுப்பு ‘எழுதாத ஒரு கவிதை’ 2013 இல் வெளிவந்தது. நான்காவது தொகுப்பு புயல் மழைக்கு பின்னான பொழுது 2014 இல் வெளிவந்தது. பிரசுரமாகாத ஆயிரக்கணக்கான கவிதைகள் உள்ளன. நல்லூர் பிரதேச கீதம், காரைநகர் பிரதேச கீதம், பூநகரிப் பிரதேச கீதம், தெல்லிப்பளை பிரதேச கீதம், மருதங்கேணி பிரதேச கீதம் என்பன இவரால் இயற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 34
- நூலக எண்: 10512 பக்கங்கள் 18-21