"ஆளுமை:கனகசுந்தரம்பிள்ளை, தம்பிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கனகசுந்தரம்பிள்ளை, தம்பிமுத்து (1863.08 - 1922) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிமுத்து. இவர் கதிரவேற்பிள்ளை, கணேச பண்டிதர் ஆகியோரிடத்தில் தமிழிலக்கண இலக்கியங்களும் ஆங்கிலமும் பயின்று, பின் சென்னைக்கு சென்று செல்வ நாயக்கர் பாடசாலையிற் கல்வி பயின்று மத்திய படசாலைப் பரீட்சையில் சித்தி பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் எவ்.ஏ.வகுப்பில் சித்திபெற்று பிரெசிடென்சிக் கல்லூரியிலே கற்று கலைமாணி (B.A.) பரீட்சையிலும் சித்தி அடைந்தார்.  
+
கனகசுந்தரம்பிள்ளை, தம்பிமுத்து (1863.08 - 1922) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிமுத்து. இவர் கதிரவேற்பிள்ளை, கணேச பண்டிதர் ஆகியோரிடம் தமிழிலக்கண இலக்கியங்களும் ஆங்கிலமும் பயின்று, பின் சென்னைக்குச் சென்று செல்வ நாயக்கர் பாடசாலையிற் கல்வி பயின்று, மத்திய பாடசாலைப் பரீட்சையில் சித்தி பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் எவ்.ஏ.வகுப்பில் சித்திபெற்று பிரெசிடென்சிக் கல்லூரியில் கற்றுக் கலைமாணிப் (B.A.) பரீட்சையிலும் சித்தி அடைந்தார்.  
  
நீண்டக்காலமாக சென்னைப் பல்கலைக்கழகப் பரீட்சகராகவும், பரீட்சைக்குழுத் தலைவராகவும் பணியாற்றிய இவர் பச்சையப்பன் கல்லூரியில் தலைமைத் தமிழ்துறை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பளந்தமிழ் இலக்கிய ஆய்வு முயற்சிகளிலும் ஈடுபட்டுவந்த இவர் தொல்காப்பியம்- எழுத்ததிகாரத்தின் நச்சினார்க்கினியார், சேனாவரையர் ஆகியோரின் உரைகளை ஆராய்ந்து பதிப்பித்தார். 'தமிழ் நாவலர் சரிதம்', 'இல்லாண்மை' உட்பட மேலும் சில நூல்களை இயற்றியுள்ளார்.
+
நீண்டகாலமாகச் சென்னைப் பல்கலைக்கழகப் பரீட்சகராகவும் பரீட்சைக்குழுத் தலைவராகவும் பணியாற்றிய இவர், பச்சையப்பன் கல்லூரியில் தலைமைத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பழந்தழிழ் இலக்கிய ஆய்வு முயற்சிகளிலும் ஈடுபட்டுவந்த இவர், தொல்காப்பியம்- எழுத்ததிகாரத்தின் நச்சினார்க்கினியார், சேனாவரையர் ஆகியோரின் உரைகளை ஆராய்ந்து பதிப்பித்தார். 'தமிழ் நாவலர் சரிதம்', 'இல்லாண்மை' உட்பட மேலும் சில நூல்களை இயற்றியுள்ளார்.
  
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==

05:04, 1 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கனகசுந்தரம்பிள்ளை
தந்தை தம்பிமுத்து
பிறப்பு 1863.08
இறப்பு 1922
ஊர் திருகோணமலை
வகை கல்வியியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கனகசுந்தரம்பிள்ளை, தம்பிமுத்து (1863.08 - 1922) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிமுத்து. இவர் கதிரவேற்பிள்ளை, கணேச பண்டிதர் ஆகியோரிடம் தமிழிலக்கண இலக்கியங்களும் ஆங்கிலமும் பயின்று, பின் சென்னைக்குச் சென்று செல்வ நாயக்கர் பாடசாலையிற் கல்வி பயின்று, மத்திய பாடசாலைப் பரீட்சையில் சித்தி பெற்றார். பச்சையப்பன் கல்லூரியில் எவ்.ஏ.வகுப்பில் சித்திபெற்று பிரெசிடென்சிக் கல்லூரியில் கற்றுக் கலைமாணிப் (B.A.) பரீட்சையிலும் சித்தி அடைந்தார்.

நீண்டகாலமாகச் சென்னைப் பல்கலைக்கழகப் பரீட்சகராகவும் பரீட்சைக்குழுத் தலைவராகவும் பணியாற்றிய இவர், பச்சையப்பன் கல்லூரியில் தலைமைத் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பழந்தழிழ் இலக்கிய ஆய்வு முயற்சிகளிலும் ஈடுபட்டுவந்த இவர், தொல்காப்பியம்- எழுத்ததிகாரத்தின் நச்சினார்க்கினியார், சேனாவரையர் ஆகியோரின் உரைகளை ஆராய்ந்து பதிப்பித்தார். 'தமிழ் நாவலர் சரிதம்', 'இல்லாண்மை' உட்பட மேலும் சில நூல்களை இயற்றியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 159-164
  • நூலக எண்: 4136 பக்கங்கள் 01-13
  • நூலக எண்: 963 பக்கங்கள் 71-73
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 142-150
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 94-108
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 86-89