"ஆளுமை:ஜெயமணிதேவி, ஐயாத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 19: வரிசை 19:
 
{{வளம்|7571|98}}
 
{{வளம்|7571|98}}
 
{{வளம்|15444|105}}
 
{{வளம்|15444|105}}
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]

01:42, 25 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஜெயமணிதேவி ஐயாத்துரை
பிறப்பு 1943.01.23
ஊர் கல்வியங்காடு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயமணிதேவி ஐயாத்துரை (1943.01.23 - ) யாழ்ப்பாணம், கல்வியங்காட்டைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர். இவரது தந்தை ஐயாத்துரை. யாழ்ப்பாணம் இராமநாதன் இசைக் கல்லூரியில் பயின்று சங்கீத இரத்தினம் பட்டத்தைப் பெற்றதோடு வட இலங்கை சங்கீத சபையின் தரம் 6 பரீட்சையில் சித்தி பெற்று 'கலாவித்தகர்' பட்டத்தையும் பெற்றார். 1977ஆம் ஆண்டு இசை ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் 2003ஆம் ஆண்டு வரை பணியாற்றி ஓய்வுப் பெற்றார். இவர் வட இலங்கை சங்கீத சபை செயன்முறைப் பரீட்சகராகவும், விடைத்தாள் மதிப்பீட்டாளராகவும், யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப் பிரிவின் செயன்முறைப் பரீட்சை மதிப்பீட்டாளராகவும் பணி புரிந்துள்ளார்.

இவர் அண்ணாமலை இசைத் தமிழ் மன்றம், இளங்கலைஞர் மன்றம், ரசிகரஞ்சன சபா ஆகியவற்றினூடாக தன் மிருதங்க இசையை வழங்கியுள்ளார். மேலும் பொது நிகழ்வுகள், ஆலய இசைக் கச்சேரிகள், கலை விழாக்கள், பண்ணிசை நிகழ்வுகள், நடன நிகழ்வுகள் ஆகியவற்றிலும் மிருதங்கம் வாசித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு செங்குத்தா இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினரால் வெண்கலப் பதக்கம் சூட்டி கௌரவிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேசக் கலாசாரப் பேரவை கலைஞானச் சுடர் விருதினை வழங்கியுள்ளது. இவர் ஈழத்தில் மிருதங்க இசைத் துறையில் பட்டம் பெற்ற முதற் பெண்ணாக கருதப்படுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 98
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 105