"ஆளுமை:அன்னலட்சுமி, இராசதுரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அன்னலட்சுமி இராஜதுரை|
+
பெயர்=அன்னலட்சுமி|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 26: வரிசை 26:
 
{{வளம்|406|04-05}}
 
{{வளம்|406|04-05}}
 
{{வளம்|10174|30}}
 
{{வளம்|10174|30}}
 +
{{வளம்|14527|15-17}}

03:38, 11 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அன்னலட்சுமி
பிறப்பு
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்னலட்சுமி இராஜதுரை யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், பத்திரிகையாளர். கல்வியங்காடு செங்குத்தா இந்துக் கல்லூரியிலும் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியிலும் பயின்றவர்.

யாழ் நங்கை எனும் புனைபெயரில் எழுத்துலகில் பிரவேசித்த இவர் 1962ஆம் ஆண்டில் வீரகேசரியில் உதவி ஆசிரியராக தன்னை இணைத்துக் கொண்டு, செய்திகளோடு 'மாணவர் கேசரி' என்னும் பக்கத்தையும் கவனித்தார். அத்தோடு 1966 இல் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட 'ஜோதி' என்னும் குடும்ப வார இதழின் பொறுப்பாசிரியராகவும், 1969 ஆம் ஆண்டு முதல் வீரகேசரி நாளிதழின் கட்டுரைப் பகுதிக்கு பொறுப்பாகவும், 1973 முதல் 1984 மித்திரன் வார மலர் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். 2010 முதல் கலைக்கேசரி மாத இதழ் ஆசிரியராக உள்ளார்.

விழிச்சுடர் (குறுநாவல்), உள்ளத்தின் கதவுகள் (புதினம்), நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுப்பு), இருபக்கங்கள் (கவிதைத் தொகுப்பு), நினைவுப் பெருவெளி போன்ற நூல்கள்இவரால் வெளியிடப்பட்டன. இவரது பத்திரிகைப் பணியைப் பாராட்டி இந்துக் கலாசார அமைச்சு 1992 ஆம் ஆண்டு 'தமிழ்மணி' விருது வழங்கிக் கௌரவித்தது. அத்தோடு சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை 1993 ஆம் ஆண்டு எட்மண்ட் விக்கிரமசிங்க அறக்கட்டளை, அன்றைய அரசுத்தலைவர் டி. பி. விஜயதுங்க மூலம் இவருக்கு வழங்கிக் கௌரவித்தது.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 59
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 99-102
  • நூலக எண்: 406 பக்கங்கள் 04-05
  • நூலக எண்: 10174 பக்கங்கள் 30
  • நூலக எண்: 14527 பக்கங்கள் 15-17