"ஆளுமை:சோமகாந்தன், நாகேந்திர ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 29: வரிசை 29:
 
{{வளம்|13844|198-201}}
 
{{வளம்|13844|198-201}}
 
{{வளம்|2028|29-30}}
 
{{வளம்|2028|29-30}}
 +
{{வளம்|2055|31-40}}

02:48, 16 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சோமகாந்தன்
தந்தை நாகேந்திரஐயர்
பிறப்பு 1934.01.14
இறப்பு 2006.04.28
ஊர் கரணவாய், கலட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோமகாந்தன், நாகேந்திரஐயர் (1934.01.14 - 2006.04.28) யாழ்ப்பாணம், கலட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நகேந்திரஐயர். தனது ஆரம்பப் கல்வியினை கரணவாய் குருக்கள் பாடசாலையில் ஆரம்பித இவர் இடைநிலைக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியிலும் பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியிலும் கற்றார். விக்னேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்கும் காலமே இவரின் எழுத்துப்பணிக்கு வித்திட்ட களமாக அமைந்தது. கலாமதி, கலைப்பித்தன், கருணையூர்ச்சோமு ஆகிய புனை பெயர்களைக் கொண்ட இவர் சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார்.

இவர் நிலவோ நெருப்போ (சிறுகதைத் தொகுதி), விடிவெள்ளி பூத்தது (நாவல்), ஈழத்து இலக்கிய வரலாறு - பல்துறை நோக்கு (ஆய்வு), பொய்கை மலர் (நாவல்), நிகழ்வுகளும் நினைவுகளும் - காந்தன் கண்ணோட்டம், தத்துவச் சித்திரங்கள் (வானொலி உரைகள்), ஆகுதி (சிறுகதைத் தொகுதி), ஈழத்தமிழருக்கு ஏன் இந்த வேட்கை?, Lanka and Ramayanam, Ancient Temples of Shiva in Sri Lanka போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.

1991ல் இவரது இலக்கியப் பணியைக் கெளரவித்து திருகோணமலை இலக்கிய நண்பர்களினால் இலக்கியக் குரிசில் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டதோடு, 1994இல் இலங்கை கலாசார அமைச்சு தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் அவர் வழங்கிய சேவையைப் பாராட்டி 'தமிழ் ஒளி' என்னும் பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 130-131
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 46
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 198-201
  • நூலக எண்: 2028 பக்கங்கள் 29-30
  • நூலக எண்: 2055 பக்கங்கள் 31-40