"ஆளுமை:அஸ்வர், அப்துல் லதீப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:அஸ்வர், ஏ. எல். எம்., ஆளுமை:அஸ்வர், அப்துல் லதீப் என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...)
(வேறுபாடு ஏதுமில்லை)

01:27, 8 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் அஸ்வர்
தந்தை அப்துல் லதீப்
தாய் சித்தி பாத்திமா
பிறப்பு 1953.01.01
ஊர் களுத்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஸ்வர், அப்துல் லதீப் (1953.01.01 - ) களுத்துறையை சேர்ந்த எழுத்தார்; ஊடகவியலாளர். இவரது தந்தை அப்துல் லதீப்; தாய் சித்தி பாத்திமா. இவர் ஹேனமுல்லை ஜீலான் மத்திய கல்லூரியில் க.பொ.த. (சா/த) வரையும், உயர்தரக் கல்வியை தொட்டவத்தை அல் பஃரியா மத்திய கல்லூரியிலும் கற்றார். இரத்மலானை மக்கள் வங்கிக் கிளையில் உதவி முகாமையாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.

இவரது முதலாவது ஆக்கம் 1965ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில் கேள்வி - பதில் எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்ப்பட்ட கவிதைகளையும், 30 சிறுகதைகளையும், நூற்றுக்கணக்கான செய்திக் கட்டுரைகள், விமர்சனங்கள், சமூக சீர்த்திருத்தக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், உரைநடைச் சித்திரங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். நவமணி, தினபதி, தினகரன், அல்ஹஸனாத் ஆகிய பத்திரிகைகளில் செய்தியாளராக கடமையாற்றியுள்ளார் அதேநேரம் நாடங்களிலும் நடித்துள்ளார்.

இவரது திறமைக்காக சாமஶ்ரீ, சமூகஜோதி, சமாதான நீதவான், சேவைச் செம்மல் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 90-93