"ஆளுமை:வைத்தியநாதசர்மா, பரமசாமிக்குருக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Pirapakar, ஆளுமை:வைத்தியநாதசர்மா, பரமாசாரிகுருக்கள் பக்கத்தை [[ஆளுமை:வைத்தியநாதசர்மா, பரமசாமிக்க...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:45, 22 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வைத்தியநாதசர்மா |
தந்தை | பரமசாமிக்குருக்கள் |
தாய் | வேதநாயகி |
பிறப்பு | 1923.10.08 |
இறப்பு | 1977 |
ஊர் | கைதடி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வைத்தியநாதசர்மா, பரமசாமிக்குருக்கள் (1923.10.28 - 1977) யாழ்ப்பாணம், கைதடியைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை பரமசாமிக்குருக்கள்; தாய் வேதநாயகி. இவர் தனது ஆரம்பக் கல்வியை வட்டுகோட்டை இந்துக் கல்லூரியில் கற்றதோடு வயலின் இசையை தனது 14ஆவது வயதில் மலேசியாவிலுள்ள இந்து கான சபாவில் வயலின் வித்துவான் தூத்துக்குடி பொன்னுச்சாமி ஐயங்காரிடம் கற்றார். மேலும் இந்தியா சென்று மைசூர் குருராஜப்பாவிடமும் மருங்காபுரி கோபாலிகிருஷ்ணனிடமும் வயலின் இசையின் நுட்பங்களைக் கற்று இந்தியாவிலே அரங்கேற்றம் செய்து பல கச்சேரிகளையும் நிகழ்த்தினார். இவர் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் இசையாசிரியராக சில காலம் கடமைபுரிந்ததோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இசை ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார்.
1946ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பிய இவர் இந்தியாவிலிருந்து வருகை தந்த சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, எ. கல்யாண கிருஷ்ணபாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஈழத்து கலைஞர்களான இசைப்புலவர் சண்முகரட்ணம், பரமதில்லைராஜா ஐயாக்கண்ணு தேசிகர், எஸ். பாலசுப்பிரமணிய ஐயர், டி. எஸ். மணிபாகவதர் ஆகியோருக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7474 பக்கங்கள் 64-67