"ஆளுமை:செல்லத்துரை, நாகமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 21: | வரிசை 21: | ||
{{வளம்|4428|113-117}} | {{வளம்|4428|113-117}} | ||
{{வளம்|7571|156}} | {{வளம்|7571|156}} | ||
− | |||
− | |||
− | |||
− |
23:50, 19 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | செல்லத்துரை, நாகமுத்து |
தந்தை | நாகமுத்து |
பிறப்பு | 1929.01.06 |
ஊர் | நவாலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நா.செல்லத்துரை (1929.01.06 - ) யாழ்ப்பாணம் நவாலியூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை நாகமுத்து. தனது வாழ்வியல் தொழிலாக ஆசிரியப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் 1951ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டு வந்துள்ளார்.
1976ஆம் ஆண்டில் மாத்தளை ஜெயசித்திரா மூவிசரால் வெளியிடப்பெற்ற இலங்கைத் தமிழ் சினிமாவான காத்திருப்பேன் உனக்காக என்னும் திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம், பாடல்கள் எழுதியதோடு குணசித்திர பாத்திரத்திலும் இவர் நடித்துள்ளார். இவரது கலை இலக்கியப் பணியைப் பாராட்டி நவலியூரன் கலை இலக்கியப் பணிகள் என்ற நூலினை வி. பி. தனேந்திரா என்பவர் வெளியிட்டுள்ளார்.
முகை வெடித்த மொட்டு என்னும் இவருடைய நாவல் 1967ஆம் ஆண்டிற்கான சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. அத்தோடு இவரின் நாடக ஆற்றலைப் பாராட்டி புதுமை நடிகன், கலைமதி, சர்வகலா வல்லவன், நடிப்பிசைத் திலகம், நாடகக் குரிசில், தமிழ் நாடகத்துறைத் திலகம், கலை மாணிக்கம், கலைத் தென்றல் ஆகிய பட்டங்களை பல்வேறு கிராம சமூக மக்கள் வழங்கி கௌரவித்துள்ளார்கள்.
கலாபூசணம் விருது, முதுகலைஞருக்கான விருது, ஏ.ரி.பொன்னுத்துரை நினைவு விருது, கலைஞானச்சுடர் விருது போன்றன இவருக்கு கிடைக்கப்பெற்ற விருதுகளாகும்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 113-117
- நூலக எண்: 7571 பக்கங்கள் 156