"ஆளுமை:சத்தியசீலன், சமாதிலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சத்தியசீலன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (வெளி இணைப்புக்கள்)
வரிசை 19: வரிசை 19:
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D ச.சத்தியசீலன் பற்றி சி.சுதர்சன்]
 

05:24, 9 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சத்தியசீலன், சமாதிலிங்கம்
தந்தை சமாதிலிங்கம்
பிறப்பு 1951.04.20
ஊர் வேலணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ச.சத்தியசீலன் (1951.04.20 - ) யாழ்ப்பாணம் வேலணையைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமகவும் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் சமாதிலிங்கம். இவர் யாழ். இந்துக் கல்லூரி, வேலணை மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை கற்று இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்றவர் ஆவார்.

1997 ம் ஆண்டில் இருந்து 2008 ம் ஆண்டு வரை யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவராக இருந்த இவர் 2008 ம் ஆண்டு முதல் யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக கடமையாற்றினார். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர், நல்லூர் லயன்ஸ் கழகத் தலைவர், லயன்ஸ் கழக மாவட்டத் தலைவர், கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் பரிபாலன சபை, தந்தை செல்வா ஞாபகார்த்த நிதியம், யாழ் இந்து சகல ஒளி நூற்றாண்டு மலர் ஆசிரியர் ஆகிய பதவிகளை இவர் வகித்துள்ளார். வரலாற்றுத்துறை சார்ந்த பத்திற்கும் மேற்பட்ட நூல்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் இதுவரை எழுதியுள்ளார். தேசிய, பிராந்திய, சர்வதேச மட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டும், ஆய்வுத் துறையில் ஈடுபட்டும் வரும் இவரின் நூல்களில் இலங்கை அரசியல் மொழியும் மதமும், இலங்கை இனப்பிரச்சினையில் பொருளாதார மூலங்கள், இலங்கைத் தமிழர் வரலாற்றில் சில பக்கங்கள், மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாண சமூகமும் என்னும் நூல்கள் முக்கியமானவை. இதில் மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாண சமூகமும் என்ற நூல் 2006 ம் ஆண்டுக்கான சம்பந்தர் விருதினையும், இலங்கை இலக்கியப் பேரவை விருதினையும் பெற்றுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 74


வெளி இணைப்புக்கள்