"ஆளுமை:சொக்கலிங்கம், கந்தசாமிச்செட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=சொக்கலிங்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சொக்கலிங்கம், | + | பெயர்=சொக்கலிங்கம், கந்தசாமிச்செட்டி | |
− | தந்தை=| | + | தந்தை=கந்தசாமிச்செட்டி| |
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=| | + | பிறப்பு=1930.06.02| |
− | இறப்பு=| | + | இறப்பு=2004.10.02| |
− | ஊர்=| | + | ஊர்=ஆவரங்கால்| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்=சொக்கன் | | புனைபெயர்=சொக்கன் | | ||
}} | }} | ||
− | சொக்கலிங்கம் ஓர் எழுத்தாளர். சொக்கன் எனும் பெயரில் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், | + | க.சொக்கலிங்கம் (1930.06.02 - 2004.10.02) யாழ்ப்பாணம் ஆவரங்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் கந்தசாமிச்செட்டி. இவர் சொக்கன் எனும் பெயரில் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், பாடநூல்கள், நாவல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். யாழ் ஸ்ரான்லிக் கல்லூரியில் இடைநிலைக்கல்வி கற்ற இவர் பின்னர் தமிழ் வித்துவான் (Diploma in Tamil), கலைமானி, முதுகலைமானி, கௌரவ கலாநிதிப் பட்டங்களை பல்கலைக் கழகங்களில் பெற்றுள்ளார். அத்தோடு அரச பாடசாலையின் அதிபராக இருந்து இவர் ஓய்வு பெற்றவர். |
+ | |||
+ | ஈழத்து நாவல் வரலாற்றில் சாதி முறையை மையமாக வைத்து ”சீதா” என்னும் நாவலை முதலில் எழுதியவர் இவரேயாவார். பல்வேறு புனைபெயர்களில் கவிதை, சிறுகதை, நாவல்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகம் என எழுதியிருக்கும் சொக்கன் சிறந்த இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை இவருக்கு ”தமிழ்மாமணி” என்ற பட்டத்தையும், இந்து கலாச்சார அமைச்சு ”இலக்கிய செம்மல்” என்ற பட்டத்தையும் அகில இலங்கை கம்பன் கழகம் ”மூதறிஞர்” பட்டத்தையும் இவருக்கு வழங்கிக் கௌரவித்து உள்ளன. மாணவராக இவர் இருந்த காலத்தில் எழுதிய ”சிலம்பு பிறந்தது”, ”சிங்ககிரிக் காவலன்” ஆகிய இரு நாடகங்களுக்கும் இவருக்கு பரிசு கிடைத்துள்ளன. | ||
+ | |||
+ | நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள சொக்கன் ”கடல்” என்னும் சிறுகதை தொகுப்பை 1972ம் ஆண்டு வெளியிட்டு சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றார். மரபுவழி கவிதை படைப்பதில் வல்லவரான சொக்கன் வீரத்தாய், நசிகேதன், நல்லூர் நான் மணிமாலை, நெடும்பா முதலிய கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கம்பன் கழகத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். 1977 இல் முத்தமிழ் வெளியீட்டுக்கழகம் என்னும் ஆய்வு நூல் வெளியீட்டகத்தை அமைக்க இவர் பாடுபட்டார். இந்நூல் நிறுவனம் முதலில் வெளியிட்ட நூல் ”ஈழத்துத் தமிழ் நூல் வளர்ச்சி” என்னும் இவரின் முதுகலைமாணி ஆய்வுக்காக எழுதப்பட்ட நூலாகும். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|300|70-71}} | {{வளம்|300|70-71}} | ||
+ | {{வளம்|7571|43}} | ||
== வெளி இணைப்புக்கள்== | == வெளி இணைப்புக்கள்== | ||
* | * | ||
+ | [http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D க.சொக்கலிங்கம் பற்றி சி.சுதர்சன்] |
00:42, 5 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சொக்கலிங்கம், கந்தசாமிச்செட்டி |
தந்தை | கந்தசாமிச்செட்டி |
பிறப்பு | 1930.06.02 |
இறப்பு | 2004.10.02 |
ஊர் | ஆவரங்கால் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
க.சொக்கலிங்கம் (1930.06.02 - 2004.10.02) யாழ்ப்பாணம் ஆவரங்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் கந்தசாமிச்செட்டி. இவர் சொக்கன் எனும் பெயரில் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், பாடநூல்கள், நாவல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். யாழ் ஸ்ரான்லிக் கல்லூரியில் இடைநிலைக்கல்வி கற்ற இவர் பின்னர் தமிழ் வித்துவான் (Diploma in Tamil), கலைமானி, முதுகலைமானி, கௌரவ கலாநிதிப் பட்டங்களை பல்கலைக் கழகங்களில் பெற்றுள்ளார். அத்தோடு அரச பாடசாலையின் அதிபராக இருந்து இவர் ஓய்வு பெற்றவர்.
ஈழத்து நாவல் வரலாற்றில் சாதி முறையை மையமாக வைத்து ”சீதா” என்னும் நாவலை முதலில் எழுதியவர் இவரேயாவார். பல்வேறு புனைபெயர்களில் கவிதை, சிறுகதை, நாவல்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகம் என எழுதியிருக்கும் சொக்கன் சிறந்த இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை இவருக்கு ”தமிழ்மாமணி” என்ற பட்டத்தையும், இந்து கலாச்சார அமைச்சு ”இலக்கிய செம்மல்” என்ற பட்டத்தையும் அகில இலங்கை கம்பன் கழகம் ”மூதறிஞர்” பட்டத்தையும் இவருக்கு வழங்கிக் கௌரவித்து உள்ளன. மாணவராக இவர் இருந்த காலத்தில் எழுதிய ”சிலம்பு பிறந்தது”, ”சிங்ககிரிக் காவலன்” ஆகிய இரு நாடகங்களுக்கும் இவருக்கு பரிசு கிடைத்துள்ளன.
நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள சொக்கன் ”கடல்” என்னும் சிறுகதை தொகுப்பை 1972ம் ஆண்டு வெளியிட்டு சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றார். மரபுவழி கவிதை படைப்பதில் வல்லவரான சொக்கன் வீரத்தாய், நசிகேதன், நல்லூர் நான் மணிமாலை, நெடும்பா முதலிய கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கம்பன் கழகத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். 1977 இல் முத்தமிழ் வெளியீட்டுக்கழகம் என்னும் ஆய்வு நூல் வெளியீட்டகத்தை அமைக்க இவர் பாடுபட்டார். இந்நூல் நிறுவனம் முதலில் வெளியிட்ட நூல் ”ஈழத்துத் தமிழ் நூல் வளர்ச்சி” என்னும் இவரின் முதுகலைமாணி ஆய்வுக்காக எழுதப்பட்ட நூலாகும்.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 70-71
- நூலக எண்: 7571 பக்கங்கள் 43