"ஆளுமை:ஐயாத்துரை, வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஐயாத்துரை, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வே.ஐயாத்துரை (1926.02.02 - 1996.04.18) யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வையூரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன். இவரது தந்தையாரின் பெயர் வேலுப்பிள்ளை. இவர் கவித்திறனும், இசைத் திறனும், நாடகத்திறனும் நிறையப் பெற்றவர். அரியாலை சிறீ கலைமகள் நாடக சபாவின் இயக்குனராகவும், அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய ஆரம்ப கால செயலாளராகவும், சுண்டுக்குளி யாழ்.நாடகக் கலாமன்றத்தின் செயலாளராகவும், நடிகராகவும் இவர் கடமையாற்றியவர் ஆவார்.
+
வே.ஐயாத்துரை (1926.02.02 - 1996.04.18) யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் கவிஞன். இவரது தந்தையாரின் பெயர் வேலுப்பிள்ளை. இவர் கவித்திறனும், இசைத் திறனும், நாடகத்திறனும் நிறையப் பெற்றவர். அரியாலை ஶ்ரீ கலைமகள் நாடக சபாவின் இயக்குனராகவும், அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய ஆரம்ப கால செயலாளராகவும், சுண்டுக்குளி யாழ்.நாடகக் கலாமன்றத்தின் செயலாளராகவும் கடமையாற்றியதோடு நடிகராகவும் திகழ்ந்தார்.
  
பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றில் தனது கவிதை ஆற்றலை வெளிப்படுத்தி யாழ்.இலக்கியவட்டத்தின் மூலம் 1965ஆம் ஆண்டு காலப்பகுதிக்குப் பின்னர் அறிமுகமான இவர் கவிதைகளை இசையுடன் பாடி கவியரங்குகளை கலகலப்படையச் செய்தவர். இதன் காரணமாக ''கன்னல் இசை மழை பொழியும் கவித்துரை'' எனப் பலராலும் பாராட்டப் பெற்றார். அத்தோடு இவர் இலங்கை அரசினால் காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி 1969ஆம் ஆண்டு நடத்தப்பெற்ற கவிதைப் போட்டியில் பரிசுப் பெற்று அப் பரிசினை முன்னாள் இந்தியப் பிரதமர் நேரு அவர்களின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டிடம் வாங்கிய பெருமைக்குரியவர் ஆவார்.  
+
யாழ்.இலக்கியவட்டத்தின் மூலம் 1965ஆம் ஆண்டு காலப்பகுதிக்குப் பின்னர் அறிமுகமான இவர் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றில் தனது கவிதை ஆற்றலை வெளிப்படுத்தியதோடு கவியரங்குகள்தோரும்  கவிதைகளை இசையுடன் பாடி கலகலப்படையச் செய்தவர். இதன் காரணமாக ''கன்னல் இசை மழை பொழியும் கவித்துரை'' எனப் பலராலும் பாராட்டப் பெற்றார். இவர் இலங்கை அரசினால் காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி 1969ஆம் ஆண்டு நடாத்தப்பெற்ற கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியதோடு அதற்கான பரிசினை முன்னாள் இந்தியப் பிரதமர் நேரு அவர்களின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டிடம் வாங்கிய பெருமைக்குரியவர்.  
  
இவர் தான் சார்ந்த யாழ்.இலக்கிய வட்டத்தின் வெளியீடாக ''வெள்ளைக்கமலம்'', ''வளர்தெங்கு'' ஆகிய நூல்களை படைத்தார். இவரது கவித்துறைக்கான அளப்பறிய சேவையைப் பாராட்டி யாழ்.இலக்கிய வட்டம் இவர் மறைந்த பின்னரும் ''ஐயாத்துரையின் கவிதைகள்'' என்ற நூலை வெளியிட்டது. இசை நாடகங்கள் எழுதுவதிலும் அதனை இயக்குவதிலும் நடிப்பதிலும் வல்லமை மிக்கவரான இக் கவிஞரை அகில இலங்கை கம்பன் கழகம் பராட்டி விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்து ''மூதறிஞர்'' என்ற பட்டமும் வழங்கியது. அரியாலை சிறீகலைமகள் சனசமூக நிலையம் இவருக்கு ''கலைப்புகழ்'' விழா எடுத்துக் கௌரவித்து மலரு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
+
இவர் தான் சார்ந்த யாழ்.இலக்கிய வட்டத்தின் வெளியீடாக ''வெள்ளைக்கமலம்'', ''வளர்தெங்கு'' ஆகிய கவிதை நூல்களை படைத்தார். இசை நாடகங்கள் எழுதுவதிலும் அதனை இயக்குவதிலும் நடிப்பதிலும் வல்லமை மிக்கவரான இக் கவிஞரை அகில இலங்கை கம்பன் கழகம் பராட்டி விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்து ''மூதறிஞர்'' என்ற பட்டமும் வழங்கியது. அரியாலை சிறீகலைமகள் சனசமூக நிலையம் இவருக்கு ''கலைப்புகழ்'' விழா எடுத்துக் கௌரவித்து மலரும் வெளியிட்டது. கவித்துறைக்கான இவரது அளப்பெரிய சேவையைப் பாராட்டி யாழ்.இலக்கிய வட்டம் இவர் மறைந்த பின்னரும் ''ஐயாத்துரையின் கவிதைகள்'' என்ற நூலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

03:24, 30 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஐயாத்துரை, வேலுப்பிள்ளை
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1926.02.02
இறப்பு 1996.04.18
ஊர் அல்வையூர்
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வே.ஐயாத்துரை (1926.02.02 - 1996.04.18) யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் கவிஞன். இவரது தந்தையாரின் பெயர் வேலுப்பிள்ளை. இவர் கவித்திறனும், இசைத் திறனும், நாடகத்திறனும் நிறையப் பெற்றவர். அரியாலை ஶ்ரீ கலைமகள் நாடக சபாவின் இயக்குனராகவும், அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய ஆரம்ப கால செயலாளராகவும், சுண்டுக்குளி யாழ்.நாடகக் கலாமன்றத்தின் செயலாளராகவும் கடமையாற்றியதோடு நடிகராகவும் திகழ்ந்தார்.

யாழ்.இலக்கியவட்டத்தின் மூலம் 1965ஆம் ஆண்டு காலப்பகுதிக்குப் பின்னர் அறிமுகமான இவர் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றில் தனது கவிதை ஆற்றலை வெளிப்படுத்தியதோடு கவியரங்குகள்தோரும் கவிதைகளை இசையுடன் பாடி கலகலப்படையச் செய்தவர். இதன் காரணமாக கன்னல் இசை மழை பொழியும் கவித்துரை எனப் பலராலும் பாராட்டப் பெற்றார். இவர் இலங்கை அரசினால் காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி 1969ஆம் ஆண்டு நடாத்தப்பெற்ற கவிதைப் போட்டியில் வெற்றியீட்டியதோடு அதற்கான பரிசினை முன்னாள் இந்தியப் பிரதமர் நேரு அவர்களின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டிடம் வாங்கிய பெருமைக்குரியவர்.

இவர் தான் சார்ந்த யாழ்.இலக்கிய வட்டத்தின் வெளியீடாக வெள்ளைக்கமலம், வளர்தெங்கு ஆகிய கவிதை நூல்களை படைத்தார். இசை நாடகங்கள் எழுதுவதிலும் அதனை இயக்குவதிலும் நடிப்பதிலும் வல்லமை மிக்கவரான இக் கவிஞரை அகில இலங்கை கம்பன் கழகம் பராட்டி விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்து மூதறிஞர் என்ற பட்டமும் வழங்கியது. அரியாலை சிறீகலைமகள் சனசமூக நிலையம் இவருக்கு கலைப்புகழ் விழா எடுத்துக் கௌரவித்து மலரும் வெளியிட்டது. கவித்துறைக்கான இவரது அளப்பெரிய சேவையைப் பாராட்டி யாழ்.இலக்கிய வட்டம் இவர் மறைந்த பின்னரும் ஐயாத்துரையின் கவிதைகள் என்ற நூலை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 18


வெளி இணைப்புக்கள்