"ஆளுமை:பொன்னுத்துரை, சண்முகம் (எஸ்.பொ.)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
பிறப்பு=1932.06.04| | பிறப்பு=1932.06.04| | ||
இறப்பு=2014.11.26| | இறப்பு=2014.11.26| | ||
− | ஊர்=நல்லூர் | + | ஊர்=நல்லூர்| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | |
22:20, 28 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பொன்னுத்துரை, எஸ். |
தந்தை | சண்முகம் |
பிறப்பு | 1932.06.04 |
இறப்பு | 2014.11.26 |
ஊர் | நல்லூர் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன்னுத்துரை (பி. 1932, ஜுன் 04) யாழ்ப்பாணம், நல்லூரில் சண்முகம் என்பவன் மகனாக பிறந்தார். எஸ்பொ என அறியப்படும் இவர் ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவராவார். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் ,தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றார்.
ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 1956 இல் மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தார். நைஜீரியாவிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். தனது 13வது அகவையில் எழுத ஆரம்பித்தார். இவர் எழுதிய முதலாவது புதினம் 'தீ' ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை தோற்றுவித்ததுடன் பல சர்ச்சைகளையும் உருவாக்கியது. இதனால், பொன்னுத்துரையும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு சர்ச்சைக்குரிய மனிதராக இருந்து வந்தார்.
புரட்சிப்பித்தன், பழமைதாசன் போன்ற பல புனை பெயர்களில் இவர் எழுதினார். சடங்கு, தீ, ஆண்மை, வீ, நனைவிடைதோய்தல், இனி ஒரு விதி செய்வோம் எனப் பல புதினங்களை எழுதிப் புகழ் பெற்றார். ஆஸ்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டு வந்த இவர் 2014 நவம்பர், 26ல் காலமானார்.
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 107-109
- நூலக எண்: 3771 பக்கங்கள் 104