"ஆளுமை:நாகலிங்கம், இராசையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 12: வரிசை 12:
 
இரா. நாகலிங்கம் மட்டக்களப்பின் ஆரையம்பதியில் இராசையா, தங்கப்பிள்ளை தம்பதியரின் மகனாக 1935 மார்ச், 06ல் பிறந்த  எழுத்தாளரும், கல்விமானும், ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியும், நாடகக் கலைஞருமாவார். ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும், இடைநிலை, உயர்தரக்கல்வியை மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பெற்றார்.  
 
1952 இல் கல்வித்திணைக்கள எழுத்தராகத் தனது பணியை ஆரம்பித்த இவர் 1981ல் இலங்கை நிர்வாக சேவைப் போட்டி சோதனையில் சித்தியடைந்து, களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட். கச்சேரி தலைமையக உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து ஆளுநர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேசுவரி கதிராமனின் செயலாளராக பணியாற்றினார்.  
+
1952 இல் கல்வித்திணைக்கள எழுதுவினைஞராகத் தனது பணியை ஆரம்பித்த இவர் 1981ல் இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட். கச்சேரி தலைமையக உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து ஆளுநர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேசுவரி கதிராமனின் செயலாளராக பணியாற்றினார்.  
  
‘அன்புமணி’ எனும் புனைப்பெயரிலே அறிமுகமான இவர் அருள்மணி, தமிழ்மணி  ஆகிய பெயர்களிலும் எழுதியுள்ளார். இவரின் முதல் ஆக்கம் ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பில் கல்கி இதழில் 1954 இல் பிரசுரமானது. அன்றிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். இல்லத்தரசி, வரலாற்றுச் சுவடுகள், ஒரு தந்தையின் கதை, ஒரு தந்தையின் கதை, தமிழ் இலக்கிய ஆய்வு 2007 முதலானவை இவரது படைப்புக்களாகும்.  
+
‘அன்புமணி’ எனும் புனைப்பெயரிலே எழுத்துலகில் அறிமுகமான இவர் அருள்மணி, தமிழ்மணி  ஆகிய பெயர்களிலும் எழுதியுள்ளார். இவரின் முதல் ஆக்கம் ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பில் கல்கி இதழில் 1954 இல் பிரசுரமானது. அன்றிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். இல்லத்தரசி, வரலாற்றுச் சுவடுகள், ஒரு தந்தையின் கதை, தமிழ் இலக்கிய ஆய்வு 2007 முதலானவை இவரது படைப்புக்களாகும்.  
  
அன்புமணியின் இலக்கியப் பணியில் தனது அன்பு வெளியீட்டகம் மூலம் பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதிலும், வெளியீட்டுக்கும் உதவியுள்ளார். சாகித்தியமண்டலப் பரிசு, தமிழ்மணி, வடக்கு கிழக்கு ஆளுனர் விருது, கலாபூசணம் விருது பெற்றவர்.
+
இலக்கியப் பணியில் தனது அன்பு வெளியீட்டகம் மூலம் பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதோடு அதற்கான உதவிகளையும் செய்துள்ளார். சாகித்தியமண்டலப் பரிசு, தமிழ்மணி, வடக்கு கிழக்கு ஆளுனர் விருது, கலாபூசணம் விருது ஆகியவற்றை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
05:45, 25 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் நாகலிங்கம், இராசையா
தந்தை இராசையா
தாய் தங்கப்பிள்ளை
பிறப்பு 1935.03.06
ஊர் ஆரையம்பதி, மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரா. நாகலிங்கம் மட்டக்களப்பின் ஆரையம்பதியில் இராசையா, தங்கப்பிள்ளை தம்பதியரின் மகனாக 1935 மார்ச், 06ல் பிறந்த எழுத்தாளரும், கல்விமானும், ஓய்வுபெற்ற நிர்வாக சேவை அதிகாரியும், நாடகக் கலைஞருமாவார். ஆரம்பக்கல்வியை மட்டக்களப்பு ஆரையம்பதி இராமகிருஷ்ண வித்தியாலயத்திலும், இடைநிலை, உயர்தரக்கல்வியை மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் பெற்றார்.

1952 இல் கல்வித்திணைக்கள எழுதுவினைஞராகத் தனது பணியை ஆரம்பித்த இவர் 1981ல் இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து, களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபர், மட். கச்சேரி தலைமையக உதவி அரசாங்க அதிபர், வடக்கு, கிழக்கு மாகாண சபை உள்துறை உதவிச் செயலாளர் முதலிய பதவிகளை வகித்து ஆளுநர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேசுவரி கதிராமனின் செயலாளராக பணியாற்றினார்.

‘அன்புமணி’ எனும் புனைப்பெயரிலே எழுத்துலகில் அறிமுகமான இவர் அருள்மணி, தமிழ்மணி ஆகிய பெயர்களிலும் எழுதியுள்ளார். இவரின் முதல் ஆக்கம் ‘கிராம்போன் காதல்’ எனும் தலைப்பில் கல்கி இதழில் 1954 இல் பிரசுரமானது. அன்றிலிருந்து 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நாடகங்கள் ஆகியவற்றை இவர் எழுதியுள்ளார். இல்லத்தரசி, வரலாற்றுச் சுவடுகள், ஒரு தந்தையின் கதை, தமிழ் இலக்கிய ஆய்வு 2007 முதலானவை இவரது படைப்புக்களாகும்.

இலக்கியப் பணியில் தனது அன்பு வெளியீட்டகம் மூலம் பிற எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதோடு அதற்கான உதவிகளையும் செய்துள்ளார். சாகித்தியமண்டலப் பரிசு, தமிழ்மணி, வடக்கு கிழக்கு ஆளுனர் விருது, கலாபூசணம் விருது ஆகியவற்றை இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 128-129
  • நூலக எண்: 3771 பக்கங்கள் 139-140
  • நூலக எண்: 1858 பக்கங்கள் 90-97

வெளி இணைப்புக்கள்