"ஆளுமை:சுபாஷ்சந்திரன், பொன்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Pirapakar, ஆளுமை:சுபாஷ்சந்திரன், பொன் பக்கத்தை ஆளுமை:சுபாஷ்சந்திரன், பொன். என்ற தலைப்புக்கு வழிம...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:47, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சுபாஷ்சந்திரன், பொன். |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | இசைக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பொன் சுபாஷ்சந்திரன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் இசைக் கலைஞர். இவர் ஆரம்பத்தில் யாழ் வேலணை இந்துக் கல்லூரியில் சங்கீத ஆசிரியராக கடமையாற்றினார். 1979ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை வானொலிக்குத் தனது பங்களிப்புகளை வழங்கத் தொடங்கிய இவர் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சி தயாரிப்பாளராகத் திகழ்ந்து பல மெல்லிசைப் பாடல்களை உருவாக்கியதோடு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் ஏ பிரிவில் கர்நாடக இசை பாடியவராவார்.
இவர் பாடிய பல மெல்லிசைப் பாடல்கள் புகழ் பெற்றதோடு இன்றும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகி வருகின்றன. பின்னர் 1987ஆம் ஆண்டு நோர்வே சென்ற இவர் நோர்வே, சுவீடன் போன்ற நாடுகளில் இடம் பெற்ற சர்வதேச நிகழ்ச்சிகளில் கர்நாடக இசையில் அமைந்த இலங்கைப் பாடல்களை பாடி நாட்டிற்கும் இலங்கை கலைஞர்களுக்கும் பெருமை சேர்த்து வந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 238