"ஆளுமை:துரைசுவாமி, வைத்தியலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Pirapakar, ஆளுமை:துரைசுவாமி வைத்தியலிங்கம் பக்கத்தை ஆளுமை:துரைச்சாமி, வைத்திலிங்கம் என்ற தலைப்...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:12, 19 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | துரைசுவாமி வைத்தியலிங்கம் |
தந்தை | வைத்தியலிங்கம் |
தாய் | கதிராசிப்பிள்ளை |
பிறப்பு | 1874.06.08 |
இறப்பு | 1966 |
ஊர் | வேலணை |
வகை | அரசியல் தலைவர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இலங்கை வரலாற்றில் அழியாத்தடம் பதித்த தலைவர்களில் சேர். வைத்தியலிங்கம் துரைச்சுவாமி அவர்களும் ஒருவராவார். வேலணையை பிறப்பிடமாக கொண்ட இவர் வட்டுக்கோட்டைச் செமினரியில்(தற்போது யாழ்ப்பாணக் கல்லூரி என அழைக்கப்படுகின்றது) ஆங்கிலக்கல்வியை பயின்றார்.
பொறியியலாளராக மலேசியா சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பணியாற்றியவர். இவர் நாட்டு மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட நற்றமிழர், தேசாபிமானி, சைவாபிமானி, சிறந்த வழக்கறிஞர், சமூகத் தொண்டன், கல்வி கூடங்கள் பலவற்றின் தாபகர், சைவ வித்தியா விருத்திச் சங்கம், சைவ பரிபாலன சபை, யாழ்ப்பாணச் சங்கம் ஆகிய நிறுவனங்களின் தலைவர் என பலகோணங்களில் இவரைப் பார்க்கலாம்.
இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக 1936 முதல் 1947 வரை விளங்கிய ஒரே தமிழ் மகன். ஆறாம் ஜோர்ச் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னனால் அழைக்கப்பெற்று 'சேர்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 473-480