"மீடியாவிக்கி பேச்சு:Sidebar" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 1: வரிசை 1:
 +
==பிரபலமான பக்கங்கள்==
 
அதிகமாகப் பார்க்கப்படும் பக்கங்களை வாசகரின் தேவைக்குக் கொடுப்பது அவர்களுக்குப் பயனுள்ளதாயிருக்கலாமெனினும் நூலகத்துக்கு இழப்பாகும்.
 
அதிகமாகப் பார்க்கப்படும் பக்கங்களை வாசகரின் தேவைக்குக் கொடுப்பது அவர்களுக்குப் பயனுள்ளதாயிருக்கலாமெனினும் நூலகத்துக்கு இழப்பாகும்.
  

06:50, 25 செப்டம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

பிரபலமான பக்கங்கள்

அதிகமாகப் பார்க்கப்படும் பக்கங்களை வாசகரின் தேவைக்குக் கொடுப்பது அவர்களுக்குப் பயனுள்ளதாயிருக்கலாமெனினும் நூலகத்துக்கு இழப்பாகும்.

இயல்பாகவே அதிகம் பார்க்கப்படும் பக்கங்கள் அதிகம் பார்க்கப்பட்டு முதலில் தெரியும் மின்னூல்கள் பார்க்கப்பட்ட எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும். இதனால் ஏனைய பக்கங்களை விட அப்பக்கங்கள் பார்க்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும். இதனால் புதிதாக இணைக்கப்படும் அதிகம் பார்க்கப்படும் பக்கமொன்று அதிகம் பார்க்கப்பட பல காலமாகலாம்.

அதாவது அதிகம் பார்க்கப்படும் பக்கங்களுக்கான இணைப்பானது குறித்த சில பக்கங்கள் அதிகம் பார்க்கப்படுவதற்கு ஊக்கியாக அமையும். இதில் நூலகத்துக்கு இழப்பு என்னவென்றால் பகுப்பாக்கங்களூடாகவும் தேடுபொறிகளூடாகவும் இயல்பாக வாசகர் எவற்றைத் தேடுகிறார்கள் என்பதை அறிய முடியாது போகும்.

இப்போதுள்ள நிலையில் இலக்கணம், இலங்கை வரலாறு ஆகிய விடயங்கள் அதிகம் பார்க்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்விடயப்பரப்புக்களில் முழுமையான ஆவணப்படுத்தலின் தேவையை உணர முடிகிறது. ஏற்கனவே பெண்ணியம், இலங்கை இனப்பிரச்சினை ஆகியன தொடர்பில் பரவலான ஆவணப்படுத்தல் நூலகத்தில் நிகழ்ந்துள்ளது. அடுத்து இலங்கை வரலாறு, தமிழ் இலக்கணம் ஆகியனவற்றை ஆவணப்படுத்துவது வாசகருக்குப் பயனுள்ளது என்பதை உணர முடிகிறது. இதே விடயப்பரப்புக்களில் ஏனைய வலைத்தளங்களிலும் (எ-டு: விக்கிப்பீடியா) அச்சிலும் கூட உள்ளடக்கம் தேவைப்படுவதை உணர முடிகிறது.

இந்த வகையில் அதிகம் பார்க்கப்படும் பக்கங்களை sidebar இல் சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். sidebar இல் முகப்பு, நூலகம் பற்றி, நிதியுதவுக, இணைப்புக்கள், Font Help, புதிய பக்கங்கள் ஆகியனவற்றை மட்டும் சேர்க்கப் பரிந்துரைக்கிறேன். (இறுதியாக இணைக்கப்பட்டவை என்பதனைப் புதிய பக்கங்கள் எனப் பெயரிடலாம்) அத்துடன் அண்மைய மாற்றங்களுக்கான இணைப்பு புகுபதிகை செய்தோருக்கு மட்டும் தெரிவதாக அமைக்கப்பட வேண்டும். கோபி 11:47, 25 செப்டெம்பர் 2008 (UTC)