"நிறுவனம்:கிளி/ அன்னை சாரதாதேவி வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்= கிளி/ அன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
 
பெயர்= கிளி/ அன்னை சாரதாதேவி வித்தியாலயம் |
 
பெயர்= கிளி/ அன்னை சாரதாதேவி வித்தியாலயம் |
வகை= பாடசாலைகள் |
+
வகை= பாடசாலை |
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=கிளிநொச்சி|
 
மாவட்டம்=கிளிநொச்சி|

03:40, 24 ஆகத்து 2023 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிளி/ அன்னை சாரதாதேவி வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் மலையாளபுரம்
முகவரி மலையாளபுரம்
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கௌரவ மகிந்த ராஜபக்ஸ அவர்களின் மகிந்த சிந்தனைக்கு அமைவாக ஆயிரம் பாடசாலைத் திட்டத்தினுள் கிளி/பாரதி வித்தியாலயம் உள்வாங்கப்பபட்டமையால் அப்பாடசாலையிலிருந்த ஆரம்பப்பிரிவினை உடனடியாக அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. இத் தேவையின் காரணமாக 2012 ஆம் ஆண்டு தரம் 1ல் சேர்ந்த 65 மாணவர்களையும் அவ்வகுப்பில் கற்பித்த திருமதி.கோமிளா ஜெயரூபன், திருமதி. அனுராதா திருமுகராசா ஆகிய ஆசிரியர்களையும் உள்ளடக்கி பூநகரிக் கோட்டத்தில் மூடப்பட்டிருந்த கிளி/பொன்னாவெளி சைவப்பிரகாச வித்தியாலயம் என்ற பெயரில் பாரதி வித்தியாலயத்தின் கட்டடத்தின் ஒரு பகுதியில் கிளி/பளை மத்திய கல்லூரியில் பிரதி அதிபராகக் கடமையாற்றிய திரு. நாகேந்திரன் கணேஸ்வரநாதன் அதிபர் அவர்களின் தலைமையில் 16.06.2016 ஆம் திகதி இயங்க ஆரம்பித்தது.

இவ்வாறு ஆரம்பித்த கிளி/பாரதி வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு முற்றாக அப்பாடசாலையிலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்ற சுற்று நிருபத்திற்கு அமைவாகவும் இப்பாடசாலைக்குரிய காணியை இராணுவம் முற்றாக விடுவித்திருந்தமையாலும் கிளி/அன்னை சாரதாதேவி வித்தியாலயம் என்ற புதுப் பெயருடன் 16.06.2016 ஆம் திகதி திணைக்கள சுற்று நிருபத்திற்கு அமைவாக (SO-50) இக்காணியில் இப்பாடசாலை இயங்க ஆரம்பித்தது. இப்பாடசாலையானது 100x 60, 60x 16 கொட்டகையுடனும் மிகுதி வகுப்புக்கள் மரநிழலிலும் 15 வகுப்பறைக் கட்டமைப்புடன் இயங்கத் தொடங்கியது. இப்பாடசாலைக்காகச் செயற்படும் பப்ரிஸ் திருச்சபையினரிடம் கேட்டதற்கிணங்க வணக்கத்திற்குரிய வணபிதா ரமேஸ் அவர்களின் அவர்களின் அனுசரணை ஊடாக கொரிய கொரிய நாட்டு ஒஉதவியின் மூலம் இக்காணியிலிருந்து 15x20 அளவுள்ள விடுதிக் கட்டடம் முழுமையாகத் திருத்தி அமைக்கப்பட்டு அதிபர் அலுவலகம் இயங்கத் தொடங்கியது. பின்னர் 100x16 அளவுள்ள 05 தற்காரிக வகுப்பறைக் கொட்டகைகள் யனிசெப் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டது. இப்பாடசாலைக்கான 130x20 அளவுள்ள நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல் 03.102014 அன்று நாட்டப்பட்டு 18.06.2015 அன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. பாடசாலைக்கான சிறுவர் பூங்காவினை ஆசிரியை திருமதி.சு.கலைமதி அவர்களின் முயற்சியினால் யாழ்.அராலியைச் சேர்ந்த பொன்னுத்துரை கோபிநாதசிங் என்பவரால் (350000.00 பெறுமதியில்) அமைத்துத்தரப்பட்டது. இப்பாடசாலையின் அதிபராக் கடமையாற்றிய திரு. நா.கணேஸ்வரநாதன் அவர்கள் அதிபர் சேவை SLPS 1 தரம் கிடைத்து கிளி/பாரதி மகா வித்தியாலயத்திற்கு 02.07.2015 அன்று இடமாற்றம் பெற்றுச் சென்றார்.03.07.2015 அன்று கிளி/ கண்டாவளை மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய திருமதி. கோமதி மதியழகன் (SLPS 2) அவர்கள் இப்பாடசாலையின் இரண்டாவது அதிபராகக் கடமையினைப் பொறுப்பேற்றார். இக்காலத்தில் இரண்டாவது நிரந்தரக் கட்டடத்திற்கான அடிக்கல் 24.07.2015 அன்று இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. நா.கணேஸ்வரநாதன் அவர்களால் நாட்டப்பட்டது. 2016 ஆம் ஆண்டு தை மாதம் இக்கட்டடம் பூர்த்தியாக்கப்பட்டு தரம் 1,2 வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. 2016 ஆம் ஆண்டு 2 மலசலகூடங்களும் ஒரு தண்ணீர்த் தாங்கியும் அமைக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் பாடசாலைக்கான கீதம் திருமதி இ.சூரியகுமாரி (அதிபர்,கிளி/இராமகிருஸ்ண வித்தியாலயம்) அவர்களால் இயற்றப்பட்டு கிளி/பாரதி வித்தியாலயத்தில் சங்கீத பாடத் தொண்டராசிரியராகக் கடமையாற்றிய ஆசிரியர் செல்வி. ரஜனி கனகர் அவர்களின் முயற்சியினால் திரு.தவநாதன் றொபேட் (யாழ்.பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்-சங்கீதம்) அவர்களால் இசையமைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 05 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றதுடன் 80 % சித்தி வீதத்தினையும் பெற்றுள்ளனர். வரலாற்றின் முக்கிய நிகழ்வாக 21.11.2016 ஆம் ஆண்டில் வருடாந்த பரிசளிப்பு விழாவும், தரம் 05 புலமைப்பரிசில் விழாவும் நடைபெற்றன. இவ் விழாவின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.க.முருகவேல் அவர்கள் கலந்து சிறப்பித்தார். 2017 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 50 % மாணவர்கள் சித்தி பெற்றதுடன் ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றிருந்தார். 2018 ஆம் ஆண்டில் மூன்றாவது நிரந்தரக் கட்டடம் அமைக்கப்பட்டு தரம் 04,05 வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் 81 % மாணவர்கள் சித்தி பெற்றதுடன் 5 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றிருந்தனர். 2019 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 87 % மான மாணவர்கள் சித்தி பெற்றதுடன் 12 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றிருந்தனர். 2020 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 89 % மான மாணவர்கள் சித்தி பெற்றதுடன் 05 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றிருந்தனர். தற்போது இங்கு 13 ஆசிரியர்களும் கல்வி சாரா ஊழியர்கள் இருவரும் கடமையாற்றுகின்றனர். தற்போது 12 வகுப்புக்களில் 277 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.