"ஆளுமை:யோகா இராசநாயகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=யோகா| தந்தை=|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 +
[[படிமம்:ShiraneeMills.jpg|300px]]
 
'''யோகா இராசநாயகம்'''  
 
'''யோகா இராசநாயகம்'''  
 
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1959ம் ஆண்டு புவியியல்துறை பட்டதாரியான இவர் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியபடி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டதுடன் தொடர்ந்து பிரித்தானியாவின் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.
 
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1959ம் ஆண்டு புவியியல்துறை பட்டதாரியான இவர் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியபடி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டதுடன் தொடர்ந்து பிரித்தானியாவின் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.

01:21, 20 அக்டோபர் 2022 இல் நிலவும் திருத்தம்

பெயர் யோகா
பிறப்பு
இறப்பு 26-04-2021
ஊர்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
ShiraneeMills.jpg

யோகா இராசநாயகம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 1959ம் ஆண்டு புவியியல்துறை பட்டதாரியான இவர் அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியபடி முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டதுடன் தொடர்ந்து பிரித்தானியாவின் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். புவியியல்துறை கற்கைகளுக்கு அப்பாலும், இசைத்துறையிலும் சிறந்த பாண்டித்தியம் பெற்றிருந்த அவர், சிறந்த கர்நாடக சங்கீதப் பாடகராகவும், வீணை இசை வித்தகராகவும் விளங்கியதுடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பல வானொலி இசை நிகழ்ச்சிகளையும் நடாத்தியிருந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திர அவர்களுடைய சிங்கபாகு நாடகத்துக்கு இவர் வீணை இசை வழங்கியிருந்தார். பேராதனைப் பல்கலைக்கழகத்துக்குப் பின்னர், 1963ம் ஆண்டு முதல் கொழும்பு பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளராக தன் பணியைத் தொடர்ந்த அவர், அங்கு சிரேஷ்ட விரிவுரையாளராக தரமுயர்ந்து துறைத்தலைவராகவும் நீண்டநாட்கள் கடமையாற்றினார். இந்தக் காலப்பகுதியில் புவிவியல்துறை மற்றும் பால்நிலை சமத்துவம் சார்ந்த பல்வேறு புலமைசார் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து அவற்றின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறியின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி, தன்னுடைய துறைக்கு அப்பாலும் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டியிருந்தார். இவ்வாறு அவர் கொண்டிருந்த நீண்ட அனுபவம் மற்றும் புலமைத்துவத் தேர்ச்சி காரணமாக 2002ம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதியாக நியமனம் பெற்ற பேராசிரியர் யோகா இராசநாயகம், இதன்மூலம், இலங்கையின் முதலாவது பெண் பீடாதிபதி என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார். கொழும்புப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் பல தடவைகள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றி தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். பல்கலைக்கழக சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், தேசிய சமூக கற்கைகள் நிறுவனத்தின் புலமைத்துவப் பொறுப்பதிகாரியாகவும், சிரேஷ்ட ஆலோசகராகவும் 2006 முதல் 2014 வரையில் செயற்பட்டுவந்த வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் அவர்கள், 2011ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களால் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டிருந்தார். இதன்மூலம், இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண்மணி என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார். கொழும்பு ஹவ்லொக் வீதியில், 413/2C என்ற இலக்கத்தில் வாழ்நாள் பேராசிரியர் யோகா இராசநாயகம் வசித்துவந்த ஒழுங்கை, அவர் வேந்தராக நியமிக்கப்பட்டதை கௌரவிக்கும் வகையில் வேந்தர் வீதி என்ற மாற்றப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: பக்கங்கள்


குறிப்பு : இணைய தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யோகா_இராசநாயகம்&oldid=535825" இருந்து மீள்விக்கப்பட்டது