"ஆளுமை:பத்தினாதன், சந்தியாம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=பத்தினாதன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 2: | வரிசை 2: | ||
பெயர்=பத்தினாதன்| | பெயர்=பத்தினாதன்| | ||
தந்தை=சந்தியாம்பிள்ளை| | தந்தை=சந்தியாம்பிள்ளை| | ||
− | தாய்=| | + | தாய்= - | |
பிறப்பு=1950.06.24| | பிறப்பு=1950.06.24| | ||
இறப்பு=| | இறப்பு=| |
03:46, 14 செப்டம்பர் 2021 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பத்தினாதன் |
தந்தை | சந்தியாம்பிள்ளை |
தாய் | - |
பிறப்பு | 1950.06.24 |
ஊர் | கிளிநொச்சி,நாச்சிக்குடா |
வகை | கூத்து எழுத்தாசிரியர் அண்ணவி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பத்தினாதன்,சந்தியாம்பிள்ளை (1950.06.24 -) யாழ்ப்பாணம், மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைக்கலைஞர். இவரது தந்தை சந்தியாம்பிள்ளை. இவர் தனது பிறந்த இடத்தில் பாடசாலைக் கல்வியை முடித்து தொழில் செய்வதற்காக குருநகரில் வசித்து வந்த போது அங்குள்ள இளைஞர்களுடன் இணைந்து பல வசன நாடகங்களை மேடையேற்றினார். 1969ம் ஆண்டு 19வது வயது இளைஞனாக மேடை ஏற்றிய அப்பாலே போ சமூக நாடகம் இன்றும் நினைவில் உள்ளது. 1970 ஆம் ஆண்டு சென்றொக் எனும் அரச நாடகத்தை எழுதி நண்பர்களின் ஒத்துழைப்பை வேண்டினார். அது கிடைக்காமையினால் அந்த நாடகத்தினை அவரால் மேடையேற்றம் செய்ய முடியாமல் மிகுந்த வலியைக் கொடுத்தது.
தொழில் காரணமாக நாச்சிக்குடாவை விட்டு வந்து 1972ஆம் ஆண்டு அதே இடத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பவரை திருமணம் செய்தார். குடும்பம் தொழில் என்று நகர்ந்த இவருடைய வாழ்விற்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது இவருடைய தந்தை அண்ணாவி ராசு அவர்களின் வருகையினால் இவருடைய கலையார்வம் கலைச் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.1987 ஆம் ஆண்டு வாள்பிடித்தவல்லி என்னும் அரச நாடகத்தினை எழுதி பிள்ளைகளுக்கு பழக்கினார். 1893ஆம் ஆண்டு கண்டி அரசன் நாட்டுக்கூத்தினைப் பழகி யாகப்பர் திருவிழாவிற்கு மேடையேற்றம் செய்தார்.
2008ஆம் ஆண்டு இடப்பெயர்வுகளின் இடர்களும், 2009 ஆம் ஆண்டு முகாம் வாழ்வின் அவஸ்தைகளையும், 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் வெறுமையையும் கொடுத்த மனவலி, உடல்வலி, உளத்தாக்கம் அனைத்திற்கும் சுகம் அளிக்கும் வல்லமை கலைக்கு இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு 2010ஆம் ஆண்டு பொன்னூற் செபமாலை எனும் நாட்டு கூத்தினை எழுதினார். 2014 ஆம் ஆண்டு தை மாதம் திருந்திய உள்ளம் எனும் சமூக நாடகத்தினை எழுதி முழங்காவில் செபஸ்தியார்புற மக்களுக்குப் பழகி அவர்களுடைய செபஸ்தியார் கோயில் திருவிழாவிற்கு மேடையேற்றம் செய்துள்ளார். இவருடைய கலைப்பணியினைப் பாராட்டி 2012 வெளிநாட்டு மாவட்ட பண்பாட்டுப் பேரவை நாள் காலை விருது வழங்கப்பட்டது.