"ஆளுமை:சின்னப்பு, வைத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=சின்னப்பு|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
| வரிசை 4: | வரிசை 4: | ||
தாய்=பாக்கியம்| | தாய்=பாக்கியம்| | ||
பிறப்பு=1915| | பிறப்பு=1915| | ||
| − | இறப்பு= | + | இறப்பு=| |
ஊர்=இரணைதீவு| | ஊர்=இரணைதீவு| | ||
வகை=கூத்துக்கலைஞர்| | வகை=கூத்துக்கலைஞர்| | ||
02:44, 25 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | சின்னப்பு |
| தந்தை | வைத்தி அண்ணாவி |
| தாய் | பாக்கியம் |
| பிறப்பு | 1915 |
| ஊர் | இரணைதீவு |
| வகை | கூத்துக்கலைஞர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சின்னப்பு, வைத்தி அண்ணாவி (1915 - ) யாழ்ப்பாணம், இரணைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கூத்துக் கலைஞர். இவரது தந்தை வைத்தி அண்ணாவி; தாய் பாக்கியம். இவர் இரணைதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயின்றார். தகப்பனாருடைய நாட்டுக்கூத்துக்களான கோலியாத், எஸ்தாக்கி ,ஞானசவுந்தரி, இம்மானுவேல் போன்ற நாடகங்களில் பாத்திரமேற்று நடித்தார் .இவர் ஓர் சிறப்பான நடிகனாக திகழ்ந்தார்.தந்தையினுடைய அரங்கேற்றங்களிலும் பழக்கங்களிலும் முழு ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.தந்தைக்கு பிற்பட்ட காலங்களில் தந்தையின் நாடக கொப்பிகளை கொண்டு நாடகங்களை பழக்கி கோயில் திருவிழாவிற்கு மேடையேற்றினார். இவர்களுடைய பாரம்பரியத்தின் பின்னணியில் தான் இன்றுவரை இந்த கிராமத்து மக்கள் தமது திருவிழாவினை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாட்டுக் கூத்து மேடை ஏற்றும் பாரம்பரியத்தை கொண்டிருப்பதற்கான மூலகாரணம் என்பதில் ஐயமில்லை
திருவிழாவை முன்னிட்டு 1959ஆம் ஆண்டு செபஸ்தியார் நாடகம், 1969ஆம் ஆண்டு அந்தோணியார் நாடகம் ,1970 கோலியாத் நாடகம் 1981 ஆண்டு சந்தியோகுமையோர் நாடகம் மேடையேற்றப்பட்டதாக இவற்றில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்த மூத்த கலைஞர் திரு செபமாலை எசேக்கியல் அவர்கள் குறிப்பிடுகின்றார் ஆகவே இதற்கும் மேற்பட்ட நாடகங்களை பழக்கி மேடையேற்றி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதை ஊகிக்க முடிகின்றது
இவருடைய நாடகங்களில் மேடையேற்றத்தில் ஒத்தாசை வழங்கியவர்களில் முதன்மையானவர்களாய் மருசலீன்,சூசைசந்தியார் போன்றோர் விளங்கினர். சின்னப்பு அண்ணாவியுடன் ஏற்பட்ட அனுபவங்களும் பழக்கங்களும் தான் பிற்காலத்தில் இவர்களும் தலைசிறந்த அண்ணாவி நிலைக்கு உயர்வதற்கு அடித்தளமாய் அமைந்திருக்க வேண்டும்.