"ஆளுமை:சந்திரா, சரவணமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சந்திரா| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 15: வரிசை 15:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]]
 
 
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]
 
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]]

03:16, 23 மே 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சந்திரா
பிறப்பு 1939.08.12
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரா, சரவணமுத்து மஞ்சத்தடி இணுவிலைச் சேர்ந்த பெண் கலைஞராவார். இந்தியாவிலே மலையாள தேசத்திலே திரிசூர் எனும் ஊரில் பிறந்த இவர் பொள்ளாச்சி நகரிலுள்ள மிஷன் பாடசாலையில் ஐந்து ஆண்டுகள் கல்வி கற்றார். சந்திரா இயல்பாகவே சங்கீதம் பாடும் திறனுடையவர். கோயமுத்தூரில் உள்ள பாய்ஸ் கம்பனியில் தனது பத்து வயதில் இணைந்த சந்திராவும் சகோதரியும் பரதநாட்டியம், நாடகம் என்பவற்றை சிறந்த முறையில் பயின்றனர். இவ்வாறு முதன்முதலில் சந்திரா சீதா கல்யாணத்தில் சிறு பாத்திரம் தாங்கி நடித்து நாடக உலகில் பிரவேசித்தார். சந்திராவும் சகோதரியும் மாடன் தியேட்டரில் படம் நடிப்பதற்காக செனறார்கள். அங்கே படத்தின் குழு நடனத்திறக்காக தேர்ந்தெடுத்து லஷ்மி விஜயம் என்ற படத்தில் சிறு கட்டங்களில் நடித்தார். அதன் பின் பொள்ளாச்சி நகரிலுள்ள சிறு நாடக கம்பெனி ஒன்றில் இணைந்து அங்கே நாடகம் நடித்து வந்தார். 1949ஆம் ஆண்டு நா.சின்னத்துரை என்பவர் நடனக்குழுவிற்காக சந்திராவையும் சகோதரியையும் அவரது தந்தையுடன் இலங்கைக்கு கூட்டி வந்தார்.இலங்கையில் யாழ்ப்பாணத்திலே இரு ஆண்டுகள் நடனம் ஆடி வந்தனர். நடனம், கதகளி, நாடகம் என்பன சந்திராவும் சகோதரியும் செய்து வந்தனர். நாடகங்கள், நடனங்கள் போன்றவற்றில் இசையமைத்து கொண்டிருந்த சரவணமுத்துவை விவாகம் செய்தார்.

திருமணம் செய்த பின் 35 ஆண்டுகள் இலங்கையிலுள்ள அனைத்து பகுதிகளிலும் நாடகங்கள், நடனங்கள் போன்றவற்றை சந்திராவும் அவரது கணவர் சரவணமுத்தும் இணைந்து செய்து வந்தனர். சந்திரா சரித்திர நாடகங்களும் சமூக நாடங்களும் நடித்து வந்தார். சமூக நாடகமான வீரமைந்தன் நாடகத்தில் முதன்முதல் நடித்தார். இந்த நாடகம் வண்ணார்பண்ணையிலுள்ள மனோகரா தியேட்டரில் அரங்கேற்றப்பட்ட பொழுது பலரது பாராட்டுக்களையும் பெற்றது.