"ஆளுமை:நாகம்மா, செல்லமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
− | [[பகுப்பு:பெண் | + | [[பகுப்பு:பெண் சமூக சேவையாளர்கள்]] |
22:02, 11 நவம்பர் 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | நாகம்மா |
தாய் | பொன்னம்மா |
பிறப்பு | |
இறப்பு | 2002.04.14 |
ஊர் | கொழும்பு |
வகை | பெண் சமூகசேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாகம்மா, செல்லமுத்து கொழும்பைப் பிறப்பிடமாகவும் நுவரெலியா இருப்புப்பாலத்தை தனது வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை ஆனால் இவர் 80 வயதை கடந்தே இறந்தார். தமிழர்கள் சிங்களவர்கள் என இரு இனத்தவர்களாலும் அறியப்படும் நாகம்மா ஆச்சி பெண்கள் அரசியலில் ஈடுபடாத காலத்திலேயே 1950ஆம் ஆண்டு காலப் பகுதியிலே நுவரெலியா இருப்புப்பாலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப்பாளராக இருந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். சரளமாக சிங்கள மொழியிலும் கதைக்கக்கூடிய இவர் தமிழ், சிங்கள இரு மொழி பேசுபவர்களிடையே மிகவும் பரீட்சையமானவர். இவரைப் பற்றிய தகவல்கள் எங்கும் எழுத்து மூலம் இல்லை ஆனாலும் இவரின் குடும்பத்தாரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. 1983ஆம் ஆண்டு கருப்பு ஜுலையின் போது தனித்து நின்று சிங்களவர்களுக்கு எதிராக போராடியவர். மலையகப் பிரதேசத்தில் இவர் சமூக சேவை செய்த பிரதேசத்திலேயே இவருக்கும் இவர் குடும்பத்திற்கும் எதிராகப் பெரும்பான்மை சமூகத்தினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போது குடும்ப அங்கத்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டு தனியாளாக நின்று மிளகாய்தூள், பெரிய குண்டாந் தடி என்பவற்றை ஆயுதமாக பயன்படுத்தி பெரும்பான்மை சிங்களவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார். இருந்த போதும் இவருக்கு சொந்தமான மூன்று வீடுகளும் தீக்கிறையாகியது. கருப்பு ஜுலை என சொல்லப்படும் அந்த துயர சம்பவத்தின் பின்னரும் இவர் அப்பிரதேசத்தில் தீவிர அரசியலில் ஈடுபட்டார். வீடற்றவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தன்னால் இயலுமானவரை வீடுகளை பெற்றுக்கொடுக்க உறுதுணையாக இருந்தார். தற்போது இவர் உயிருடன் இல்லாவிட்டாலும் நாகம்மா ஆச்சியின் பெயரை அப்பகுதி மக்கள் இன்றும் மறக்காமல் உள்ளனர்.
குறிப்பு : மேற்படி பதிவு குடும்பத்தினரின் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.