"ஆளுமை:ஜெனிதா, அசோக்மத்தியு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) ("{{ஆளுமை| பெயர்=ஜெனிதா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
எழுச்சி கவிச்சுடர் விருது 2019 | எழுச்சி கவிச்சுடர் விருது 2019 | ||
+ | குறிப்பு : மேற்படி பதிவு ஜெனிதா, அசோக்மத்தியு அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது. | ||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
[[பகுப்பு:பெண் கவிஞர்கள்]] | [[பகுப்பு:பெண் கவிஞர்கள்]] | ||
[[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] | [[பகுப்பு:பெண் எழுத்தாளர்கள்]] |
10:04, 23 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்
பெயர் | ஜெனிதா |
தந்தை | இராஜதுரை |
தாய் | சந்திராங்கனி |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜெனிதா, அசோக்மத்தியு யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். ஆசிரியரான இவர் கவிதை எழுதி வருகிறார். பாடசாலைக் காலத்திலேயே உயிர்த்த ஞாயிறு நிகழ்ச்சிக்கு தானே பாடல்கள் எழுதி மாணவர்க்கு வழங்கியுள்ளார். புதுக்கவிதை, கிராமியக்கவிதை, மரபுக்கவிதை, ஹைக்கூ, சிந்து பாடல்கள், சித்திரம், கட்டுரை, சிறுகதை, நாடகம் எழுதுவதென பன்முகத் திறமைக்கொண்டவர் எழுத்தாளர். பைந்தமிழ்ச் சோலையில் இவரின் குரு மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்கள். மரபு கவிதை பயிலும் மாணவியாவார். யாப்பிலக்கணம், பா இயற்றுதல் போன்ற பயிற்சிகளைப் பயின்று தேர்வெழுதிப் பட்டமும் பெற்றுள்ளதால் சோலை மாணவி என்ற பெருமையும் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார். 1993ஆம் ஆண்டு தொடக்கம் கவிதைத் துறையில் காலடி எடுத்து வைத்துள்ள எழுத்தாளர் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பல கவிதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்களையும் பெற்றுள்ளார். கவியரங்குகளில் தலைமையேற்றும் உள்ளார். இலங்கை மட்டுமல்லாது இந்தியாவிலுள்ள முகநூல் குழுமங்கள் பலவற்றில் அங்கத்தவராகவும் பல வெற்றிச் சான்றிதழ்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இணைய வழியாகக் கவியரங்குகளிலும் பங்குபற்றியுள்ளார். முகநூல் வழியாக குழுமங்களின் ஆதரவுடன் மரபுக்கவிதை கற்பிக்கின்றார்.
விருதுகள்
கிராமத்துக்குயில் விருது (விரலோயிகம் 2018 கவிதைக்குழு இந்தியா) இளம் பாரதி விருது (விரலோவியம் 2018 கவிதைக்குழு இந்தியா) வாலி விருது 2018 கவிமுகில் விருது 2018 நிலாச்சுடர் விருது 2018 மரபொளிர் விருது 2019 வைரக்கவி விருது 2019 பொன்மகள் விருது 2019 மரபொளிர் செம்மல் விருது 2018 (சென்னை முத்தமிழ்ச் சங்கம்) விரைகவிவாணர் விருது 2019 பைந்தமிழ்ப்பாமணி விருது 2019 கவி இமயம் விருது 2018 எழுச்சி கவிச்சுடர் விருது 2019
குறிப்பு : மேற்படி பதிவு ஜெனிதா, அசோக்மத்தியு அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.