"ஆளுமை:கார்த்திகா, கணேசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையாவின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப் பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார்.  
+
கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா, யாழ். இணுவில் வீரமணி ஐயர் ஆகியோரின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப் பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடன வாரிசாகத் திகழ்கின்றார்.
 
 
கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், 1969 ஆம் ஆண்டு ''தமிழர் வளர்த்த ஆடற்கலை'',  ''காலந்தோறும் நாட்டியக்கலை''  நூல்களை வெளியிட்டுள்ளார்.
 
 
 
திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் ,
 
இவர்  நடனத் துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையாவின் மாணவி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடன வாரிசு. ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளிலும், விரிவுரைகளிலும் பங்குபற்றினார். 1969 இல்  தமிழர்  வளர்த்த ஆடற்கலைகள் நூலை வெளியிட்டார். காலந்தோறும் நாட்டியக் கலை, இந்திய நாட்டியத்தின் நாடக மாபு,  தமிழர் வளர்த்த ஆடற் கலைகள்,  நாட்டியக் கடலின் புதிய அலைகள்,
 
பல நெறியாள்கைகளை செய்துள்ளார். அரங்கேற்றம்
 
அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவர்.  நாட்டியக் கலாநிதி. முதற்குரு யாழ் இணுவில்  வீரமணி ஐயர் .  இந்தியாவில் உயர்தர நாட்டிய தாரகைகள் 21 பேரில் இவரும் ஒருவர்.  தமிழ்நாடு அரசின் விருது,  தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது பெற்றுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல்  பல்கலைக்கழகம்  கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகை தரு விரிவுரையாளர். அவுஸ்திரேலிய தமிழ் கூட்டுஹ் தாபன வானொலியில் நிகழ்ச்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிகின்றார்.  
 
 
 
  
 +
கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், 1969 ஆம் ஆண்டு ''தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்'',  ''காலந்தோறும் நாட்டியக்கலை'',  இந்திய நாட்டியத்தின் நாடக மாபு,  நாட்டியக் கடலின் புதிய அலைகள்,  நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல்  பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் நடத்தினார். இவர் பல அரங்கேற்றங்களை நெறியாள்கை செய்துள்ளார். இந்தியாவில் உயர்தர நாட்டியத் தாரகைகள் 21 பேரில் இவரும் ஒருவர். அவுஸ்திரேலியத் தமிழ் கூட்டுத்தாபன வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிகின்றார்.
  
 +
தமிழ்நாடு அரசின் விருது, தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==

02:22, 24 டிசம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கார்த்திகா, கணேசர்
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா, யாழ். இணுவில் வீரமணி ஐயர் ஆகியோரின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப் பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடன வாரிசாகத் திகழ்கின்றார்.

கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், 1969 ஆம் ஆண்டு தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், காலந்தோறும் நாட்டியக்கலை, இந்திய நாட்டியத்தின் நாடக மாபு, நாட்டியக் கடலின் புதிய அலைகள், நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் நடத்தினார். இவர் பல அரங்கேற்றங்களை நெறியாள்கை செய்துள்ளார். இந்தியாவில் உயர்தர நாட்டியத் தாரகைகள் 21 பேரில் இவரும் ஒருவர். அவுஸ்திரேலியத் தமிழ் கூட்டுத்தாபன வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிகின்றார்.

தமிழ்நாடு அரசின் விருது, தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 147
  • நூலக எண்: 13945 பக்கங்கள் 22