"ஆளுமை:உதுமான் லெப்பை முஹம்மது ஹுவைலித்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(வேறுபாடு ஏதுமில்லை)

02:55, 9 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் உதுமான் லெப்பை முஹம்மது ஹுவைலித்
பிறப்பு 1941.11.22
இறப்பு 2002.12.28
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உதுமான் லெப்பை முஹம்மது ஹுவைலித் (1941.11.22 - 2002.12.28) மாத்தளை, உக்குவளை, மாருக்கோணவைப் பிறப்பிடமாகவும் கண்டி, அலவதுகொடவை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், ஆசிரியர், அதிபர். இவர் உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலை, மாத்தளை ஸாஸிராக் கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் கல்வி கற்றார்.

இவரது முதலாவது ஆக்கம் 1959 இல் தினகரனில் வெளியானதைத் தொடர்ந்து கவிஞர் யூ.எல்.எம், ஹீவைலீத், மறையும் நிழல், பறக்கும் உயிர் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், திறனாய்வுகள், ஆய்வுகள் என்பனவற்றைப் படைத்துள்ளார். தத்துவச்சாறு, என் இல்லாள், கவி அரங்கில் மறையும் நிழல்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். 'மாற்றத்தின் தோற்றம்', 'அக்குறாளைப் பிரதேசம்' என்பன இவரது ஆய்வுகள்.

மத்திய மாகாண முஸ்லீம் கலைஞர் கௌரவிப்பு விழாவில் கலைச்சுடர் பட்டம் பெற்றவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1740 பக்கங்கள் 44-46

வெளி இணைப்புக்கள்