"ஆளுமை:பவானி, ஆழ்வாப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:பவானி ஆழ்வாப்பிள்ளை, ஆளுமை:பவானி, ஆழ்வாப்பிள்ளை என்ற தலைப்புக்கு நகர்...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:30, 2 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பவானி |
தந்தை | ஆழ்வாப்பிள்ளை |
பிறப்பு | |
ஊர் | அளவெட்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பவானி, ஆழ்வாப்பிள்ளை யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பெண்ணிய எழுத்தாளர். இவரது தந்தை ஆழ்வாப்பிள்ளை. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த இவர், ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் முதன்முதலாகப் பெண்ணியவாதத்தை முன்வைத்தவராகக் கருதப்படுகின்றார். இவர் 1960களில் சிறுகதைகளின் ஊடாக மிகத் துணிச்சலாகப் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை பதிவு செய்தார்.
இவரது சிறுகதைகள் 1956 -65 காலப்பகுதியில் வீரகேசரி, சுதந்திரன், ஈழநாடு, கலைச்செல்வி, மரகதம், சங்கம், தேனருவி முதலான இதழ்களில் வெளியாகின. லக்சுமி, பொரிக்காத முட்டை, மன்னிப்பாரா, காப்பு, விடிவை நோக்கி, சரியா தப்பா, பிரார்த்தனை என்பன இவரது சில முக்கிய சிறுகதைகள். இச்சிறுகதைகள் 1994 ஆம் ஆண்டு 'கடவுளரும் மனிதரும்' என்னும் சிறுகதைத் தொகுப்பாகப் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
வெளி இணைப்புக்கள்
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 300 பக்கங்கள் 138-139
- நூலக எண்: 10174 பக்கங்கள் 30