"ஆளுமை:தையல்நாயகி, சிவஞானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 20: | வரிசை 20: | ||
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | [[பகுப்பு:பெண் ஆளுமைகள்]] | ||
+ | [[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]] |
15:35, 5 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தையல்நாயகி, சிவஞானம் |
பிறப்பு | 1930.04.19 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தையல்நாயகி, சிவஞானம் (1930.04.19 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் தனது 08 ஆவது வயதிலிருந்து இசை பயில ஆரம்பித்துச் செல்லத்துரை, வைத்தியநாத ஐயர், கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தன்குட்டி, கந்தசாமிப்பிள்ளை ஆகியோரிடம் பயின்றார்.
இவர் சத்தியவான் சாவித்திரி, மங்கையற்கரசி, ஆயிரம் தலை வணங்கிய அபூர்வ சிந்தாமணி ஆகிய நாடகங்களை எழுதி மேடையேற்றியதோடு காரைநகர் ஶ்ரீ சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரா தேவஸ்தானத்தில் பண்ணிசை வகுப்புக்களை நடாத்தியுள்ளார்.
இவரது கலைச்சேவையைப் பாராட்டி 2005 ஆம் ஆண்டு காரைநகர் கலாச்சார சபையினால் கலைஞான சுரபி என்ற பட்டத்தையும் காரை மத்தி கிராம பொது அமைப்பினால் 2003 ஆம் ஆண்டு 'சிவப்பணி நாயகி' பட்டமும் வழங்கப்பெற்றார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 71