"ஆளுமை:விஸ்வநாதன், துரைசாமி ரெட்டியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:துரை விஸ்வநாதன், துரைசாமி ரெட்டியார், [[ஆளுமை:விஸ்வநாதன், துரைசாமி ரெட்ட...)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை1|
 
{{ஆளுமை1|
பெயர்=துரை விஸ்வநாதன்|
+
பெயர்=விஸ்வநாதன்|
 
தந்தை=துரைசாமி ரெட்டியார்|
 
தந்தை=துரைசாமி ரெட்டியார்|
 
தாய்=சிவகாமி அம்பாள்|
 
தாய்=சிவகாமி அம்பாள்|

01:09, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் விஸ்வநாதன்
தந்தை துரைசாமி ரெட்டியார்
தாய் சிவகாமி அம்பாள்
பிறப்பு 1931.02.28
இறப்பு 1998.12.21
ஊர் தமிழ்நாடு, துறையூர்
வகை பதிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஸ்வநாதன், துரைசாமி ரெட்டியார் (1931.02.28 - 1998.12.21) தமிழ்நாடு, துறையூரைச் சேர்ந்த பதிப்பாளர். இவரது தந்தை துரைசாமி ரெட்டியார்; தாய் சிவகாமி அம்பாள். இவர் 1945 ஆம் ஆண்டு வியாபாரத் தொழில் நிமித்தம் இலங்கையில் குடியேறி, 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாத்தளையில் ராணி கிரைண்டிங் மில்ஸ் நிறுவனத்தையும் அதே ஊரில் 1967 ஆம் ஆண்டு விஜயாஸ் வியாபார நிறுவனத்தையும் தொடங்கினார்.

இவர் 1976 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் விஜயா ஜெனரல் ஸ்டோர்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்ததிலிருந்து கலை இலக்கியப் படைப்புக்களைத் தேடிப் படிப்பதிலும் கலை இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்வதிலும் ஆர்வம் கொண்டார். அதன் பயனாக மல்லிகை இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா, தெளிவத்தை ஜோசப், பிரேம்ஜி ஆகியோரின் உறவும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பும் ஏற்பட, தன் கொழும்பு வியாபார நிறுவனத்தின் மேல்மாடியைக் கலை இலக்கியக் கூட்டங்கள் நடக்கின்ற ஒரு மண்டபமாக உருவாக்கியதோடு, 'துரைவி' என்ற பதிப்பகத்தை உருவாக்கும் சிந்தனையை அவருக்குள் வித்திட்டது. இவர் துரைவி பதிப்பகத்தினூடாக மலையகச் சிறுகதைகள், உழைக்கப் பிறந்தவர்கள், பாலாயி, மலையகம் வளர்த்த தமிழ், சக்தி பாலையாவின் கவிதைகள், ஒரு வித்தியாசமான விளம்பரம், மலையக மாணிக்கங்கள், மலையகச் சிறுகதை வரலாறு முதலான நூல்களைப் பதிப்பித்து வெளியீடு செய்து மலையக இலக்கிய வளர்ச்சிக்குப் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவர் 1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை அரசினால் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார். இவரது இலக்கியப் பங்களிப்பைக் கெளரவித்து 1997 ஆம் ஆண்டு இலங்கை மத்திய மாகாண சாகித்திய விழாவில் கலாச்சார அமைச்சின் விருது வழங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் 'இலக்கியக்காவலர்' என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 113-115
  • நூலக எண்: 1663 பக்கங்கள் 78-82


வெளி இணைப்புக்கள்

துரை விஸ்வநாதன் பற்றி தினகரன் வலைத்தளத்தில்