"ஆளுமை:சொக்கலிங்கம், கந்தசாமிச்செட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சொக்கலிங்கம்|
 
பெயர்=சொக்கலிங்கம்|
 
தந்தை=கந்தசாமிச்செட்டி|
 
தந்தை=கந்தசாமிச்செட்டி|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=ஆவரங்கால்|
 
ஊர்=ஆவரங்கால்|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்=சொக்கன் |
+
புனைபெயர்=சொக்கன்|
 
}}
 
}}
  
சொக்கலிங்கம், கந்தசாமிச்செட்டி (1930.06.02 - 2004.10.02) யாழ்ப்பாணம், ஆவரங்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர், அதிபர். இவரது தந்தை கந்தசாமிச்செட்டி: இவரது தாய் மீனாட்சிப்பிள்ளை. யாழ் ஸ்ரான்லிக் கல்லூரியில் இடைநிலைக்கல்வி கற்ற இவர், பின்னர் தமிழ் வித்துவான் (Diploma in Tamil), கலைமாணி, முதுகலைமாணி, கௌரவக் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் சொக்கன் என்னும் பெயரில் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், பாடநூல்கள், நாவல்களை எழுதியுள்ளதோடு சிறந்த இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார்.  
+
சொக்கலிங்கம், கந்தசாமிச்செட்டி (1930.06.02 - 2004.10.02) யாழ்ப்பாணம், ஆவரங்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், அதிபர். இவரது தந்தை கந்தசாமிச்செட்டி: தாய் மீனாட்சிப்பிள்ளை. யாழ் ஸ்ரான்லிக் கல்லூரியில் இடைநிலைக்கல்வி கற்ற இவர், பின்னர் தமிழ் வித்துவான் (Diploma in Tamil), கலைமாணி, முதுகலைமாணி, கௌரவக் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் சொக்கன் என்னும் பெயரில் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், பாடநூல்கள், நாவல்களை எழுதியுள்ளதோடு சிறந்த இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார்.  
  
ஈழத்து நாவல் வரலாற்றில் முதலில் சாதி முறையை மையமாக வைத்து ”சீதா” என்னும் நாவலை  எழுதியவர் இவரேயாவார். இவர் மாணவராக இருந்த காலத்தில் எழுதிய ”சிலம்பு பிறந்தது”, ”சிங்ககிரிக் காவலன்” ஆகிய இரு நாடகங்களுக்கும் பரிசுகள் கிடைத்துள்ளன. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை இவருக்குத் 'தமிழ்மாமணி' என்ற பட்டத்தையும் இந்துக் கலாச்சார அமைச்சு ”இலக்கியச் செம்மல்” என்ற பட்டத்தையும் அகில இலங்கைக் கம்பன் கழகம் ”மூதறிஞர்” பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்துள்ளன.  
 
01:04, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சொக்கலிங்கம்
தந்தை கந்தசாமிச்செட்டி
தாய் மீனாட்சிப்பிள்ளை
பிறப்பு 1930.06.02
இறப்பு 2004.10.02
ஊர் ஆவரங்கால்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சொக்கலிங்கம், கந்தசாமிச்செட்டி (1930.06.02 - 2004.10.02) யாழ்ப்பாணம், ஆவரங்காலைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், அதிபர். இவரது தந்தை கந்தசாமிச்செட்டி: தாய் மீனாட்சிப்பிள்ளை. யாழ் ஸ்ரான்லிக் கல்லூரியில் இடைநிலைக்கல்வி கற்ற இவர், பின்னர் தமிழ் வித்துவான் (Diploma in Tamil), கலைமாணி, முதுகலைமாணி, கௌரவக் கலாநிதிப் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் சொக்கன் என்னும் பெயரில் சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், பாடநூல்கள், நாவல்களை எழுதியுள்ளதோடு சிறந்த இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார்.

ஈழத்து நாவல் வரலாற்றில் முதலில் சாதி முறையை மையமாக வைத்து ”சீதா” என்னும் நாவலை எழுதியவர் இவரேயாவார். இவர் மாணவராக இருந்த காலத்தில் எழுதிய ”சிலம்பு பிறந்தது”, ”சிங்ககிரிக் காவலன்” ஆகிய இரு நாடகங்களுக்கும் பரிசுகள் கிடைத்துள்ளன. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை இவருக்குத் 'தமிழ்மாமணி' என்ற பட்டத்தையும் இந்துக் கலாச்சார அமைச்சு ”இலக்கியச் செம்மல்” என்ற பட்டத்தையும் அகில இலங்கைக் கம்பன் கழகம் ”மூதறிஞர்” பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்துள்ளன.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள சொக்கன் ”கடல்” என்னும் சிறுகதைத் தொகுப்பை 1972 ஆம் ஆண்டு வெளியிட்டுச் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றார். இவர் மரபுவழிக் கவிதை படைப்பதில் வல்லவர். இவர் வீரத்தாய், நசிகேதன், நல்லூர் நான்மணிமாலை, நெடும்பா முதலிய கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கம்பன் கழகத்தை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். இவர் 1977 இல் முத்தமிழ் வெளியீட்டுக்கழகம் என்னும் ஆய்வு நூல் வெளியீட்டகத்தை அமைக்கப் பாடுபட்டார். இந்நூல் நிறுவனம் முதலில் வெளியிட்ட நூல் ”ஈழத்துத் தமிழ் நூல் வளர்ச்சி” என்னும் இவரின் முதுகலைமாணி ஆய்வுக்காக எழுதப்பட்ட நூலாகும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 70-71
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 43
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 27-28
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 155-163
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 97-99
  • நூலக எண்: 2055 பக்கங்கள் 24