"ஆளுமை:இராஜகோபாலன், ஆறுமுகம் (செம்பியன்செல்வன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=இராஜகோபாலன்|
 
பெயர்=இராஜகோபாலன்|
 
தந்தை=ஆறுமுகம்|
 
தந்தை=ஆறுமுகம்|

22:15, 19 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராஜகோபாலன்
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1943.01.01
இறப்பு 2005.05.20
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இராஜகோபாலன், ஆறுமுகம் (1943.01.01 - 2005.05.20) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துத் தமிழ் ஆரம்பப் பாடசாலையிலும், உயர் கல்வியை இந்துக் கல்லூரியிலும் பயின்றார். 1960 களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் நிறைவுசெய்தார். செம்பியன் செல்வன் என்ற புனைபெயரைக் கொண்டவர்.

இவர் விவேகி, புவியியல், நுண்ணறிவு ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும், அமிர்தகங்கை, கலைஞானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். செங்கை ஆழியான் எழுதிய 'வாடைக் காற்று' திரைப்படமான பொழுது, அதற்கான திரைக்கதை, வசனங்களை எழுதிய இவர் சர்ப்பவியூகம் (சிறுகதைத்தொகுதி), அமைதியின் இறகுகள் (சிறுகதைகள்), குறுங்கதைகள் நூறு (குறுங்கதைகள்), கானகத்தின் கானம் (நாவல்), நெருப்பு மல்லிகை (நாவல்), விடியலைத் தேடும் வெண்புறாக்கள் (நாவல்), மூன்று முழு நிலவுகள் (நாடகம்), ஈழத்துச் சிறுகதை மணிகள் (விமர்சனம்), நாணலின் கீதை (தத்துவம்) ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றிய 'ஈழத்துச் சிறுகதை மணிகள்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 167-169
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 16-21
  • நூலக எண்: 393 பக்கங்கள் 06-07