"ஆளுமை:சிவசம்புப்புலவர், அருளம்பல முதலியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 32: | வரிசை 32: | ||
{{வளம்|15515|34}} | {{வளம்|15515|34}} | ||
{{வளம்|11850|78-79}} | {{வளம்|11850|78-79}} | ||
+ | {{வளம்|11601|187-203}} |
04:35, 4 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சிவசம்புப்புலவர் |
தந்தை | அருளம்பல முதலியார் |
பிறப்பு | 1830 |
இறப்பு | 1910.09.29 |
ஊர் | உடுப்பிட்டி |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவசம்புப்புலவர், அருளம்பல முதலியார் (1830 - 1910.09.29) யாழ்ப்பாணம், உடுப்பிட்டியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அருளம்பல முதலியார். இவர் நல்லூர் சரவணமுத்துப் புலவர், நல்லூர் சம்பந்தப் புலவர் ஆகியோரிடத்தில் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும், பாரதம், இராமாயணம் முதலிய இலக்கியங்களையும் கற்றுணர்ந்தார்.
இவர் இராமநாதபுரம் இரவிகுலமுத்து விஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி மீது கல்லாடக் கலித்துறை, நான்மணிமாலை, இரட்டை மணிமாலை, தனிச்செய்யுள்களைப் பாடிச் ஸ்ரீமான் இராகவையங்கார் முதலிய வித்துவான்கள் கூடிய சபையில் அரங்கேற்றி மதிப்பும் பரிசில்களும் பெற்றவர். தமிழ்ச்சங்கத்தை தாபித்த பாண்டித்துரைத்தேவர் மீது நான்மணிமாலை பாடிப் பரிசில் பெற்றவர். இவைதவிர ஈழத்திலும் இந்தியாவிலும் உள்ள பல ஆலயங்கள் மீதில் பல பிரபந்தங்கள் பாடியுள்ளார். கந்தவனநாதர் பதிகம், வல்லிபுரநாதர் பதிகம், புலோலி நான்மணிமாலை, திருச்செந்தில் யமகவந்தாதி, திருவேரகப் பெருமான் யமகவந்தாதி, எட்டிக்குடிப் பிரபந்தம், வல்லைக் கலித்துறை என்பவை உள்ளிட்ட அறுபதிற்கு மேற்பட்ட பிரபந்தங்களை இவர் பாடியுள்ளார்.
பாஸ்கர சேதுபதி மீது இவர் கல்லாடக் கலித்துறையும், நான்மணிமாலையும், இரட்டை மணிமாலையும் பாடியுள்ளார். மறைசையந்தாதி உரை, யாப்பருங்கலகாரிகை உரை, கந்தபுராணம் வள்ளியம்மை திருமணப்படலம் உரை, மயில்வாகன வம்ச வைபவம் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். கவி பாடுவதில் இவரின் வன்மையை பாராட்டி, ஆறுமுக நாவலரவர்களால் இவர் புலவர் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
சிவசம்புப் புலவர், அருளப்ப முதலியார் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 244
- நூலக எண்: 3003 பக்கங்கள் 106-110
- நூலக எண்: 13816 பக்கங்கள் 67-81
- நூலக எண்: 15444 பக்கங்கள் 17
- நூலக எண்: 15515 பக்கங்கள் 34
- நூலக எண்: 11850 பக்கங்கள் 78-79
- நூலக எண்: 11601 பக்கங்கள் 187-203