"ஆளுமை:துரைரத்தினம், கதிரிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 18: வரிசை 18:
  
 
==வெளி இணைப்பு==
 
==வெளி இணைப்பு==
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D தமிழ் விக்கிபீடியாவில் துரைரத்தினம்]
+
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D துரைரத்தினம், கதிரிப்பிள்ளை பற்றி தமிழ் விக்கிபீடியாவில்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4192|55}}
 
{{வளம்|4192|55}}
 
{{வளம்|11851|25-28}}
 
{{வளம்|11851|25-28}}

03:52, 16 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் துரைரத்தினம்
தந்தை கதிரிப்பிள்ளை
தாய் செல்லமுத்து
பிறப்பு 1930.08.10
இறப்பு 1995.09.23
ஊர் தொண்டமனாறு
வகை வழக்கறிஞர், அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைரத்தினம், கதிரிப்பிள்ளை (1930.08.10 - 1995.09.23) யாழ்ப்பாணம், தொண்டமனாற்றைச் சேர்ந்த வழக்கறிஞர்; அரசியல்வாதி;ஆசிரியர். இவரது தந்தை கதிரிப்பிள்ளை; தாய் செல்லமுத்து. தனது ஆரம்பக் கல்வியை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்று தனது 17வது அகவையில் எழுதுவினைஞராக பணியாற்றத் தொடங்கினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று 1956 இல் பருத்தித்துறை வேலாயுதம் பாடசாலையிலும் 1960 வரையில் புலோலி இந்து ஆங்கிலப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று வழக்கறிஞரானார்.

இவர் உடுப்பிட்டிக் கிராமசபைத் துணைத்தலைவராகச் செயலாற்றியதன் மூலம் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலத்தில் அக்கட்சியில் இணைந்து 1960ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் யூலை 1960, 1965, 1970 களில் இடம்பெற்ற தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவற்றை இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பை நிறுவினர். 1977 தேர்தலில் இவர் கூட்டணி சார்பில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1963ம் ஆண்டு அரச பிரதி நிதியாக இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பினைப் பயன்படுத்தி அங்கிருந்து சிலரக முந்திரிகைச் செடிகளைக் கொண்டு வந்து யாழ் குடா முழுவதும் அறிமுகப்படுத்தியதோடு விவசாயிகளுக்கு பயிற்செய்கை தொடர்பான ஆலோசனை வழங்கி விவசாயத்துறையிலும் பங்காற்றினார்.


வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 4192 பக்கங்கள் 55
  • நூலக எண்: 11851 பக்கங்கள் 25-28