"ஆளுமை:சந்திரகௌரி, சிவபாலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 19: வரிசை 19:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1855|93-95}}
 
{{வளம்|1855|93-95}}
 +
{{வளம்|1858|23-27}}

23:56, 4 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சந்திரகௌரி சிவபாலன்
தந்தை வேலுப்பிள்ளை
தாய் பரமேஸ்வரி
பிறப்பு 1960.08.07
ஊர் ஏறாவூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரகௌரி சிவபாலன் (1960.08.07 - ) மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் பரமேஸ்வரி. ஏறாவூர் மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியையும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலையில் உயர்தரக் கல்வியையும் கற்ற இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் நுகேகொட திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார். தனது சிறப்புக் கலைமாணிப் பட்ட தேர்வுக்காக "இருபதாம் நூற்றாண்டு மட்டக்களப்புத் தமிழ் இலக்கியமும் பிரதேசப் பண்பும்" எனும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். ஆசிரியராகவும், நீர்கொழும்பு கல்வித் திணைக்களத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றிய இவர் பின் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தார்.

எழுத்துலகில் இவரது முதலாவது படைப்பு 1986ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில், 'யானை உரியும் உமையாள் அச்சமும்' எனும் தலைப்பில் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து கெளசி எனும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகள், ஆன்மீக சிந்தனைகள், பாடல்கள் போன்ற ஆக்கங்களை இலங்கை தேசிய பத்திரிகைகளிலும் மண், தமிழ்நாதம்| போன்ற சஞ்சிகைகளிலும் இலண்டன் தமிழ் வானொலியிலும் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 93-95
  • நூலக எண்: 1858 பக்கங்கள் 23-27