"ஆளுமை:இராஜலக்சுமி, திலகநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Pirapakar, ஆளுமை:இராஜலக்சுமி தில்லைநாதன் பக்கத்தை ஆளுமை:இராஜலக்சுமி திலகநாதன் என்ற தலைப்புக்கு...) |
|
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:41, 4 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இராஜலக்சுமி திலகநாதன் |
தந்தை | கனகசபை |
பிறப்பு | |
ஊர் | கைதடி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராஜலக்சுமி திலகநாதன் யாழ்ப்பாணம், கைதடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகசபை. இவர் இணுவில் தமிழ்க் கலவன் பாடசாலை, நாவற்குழி மகா வித்தியாலயம், மருதனாமடம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று பின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் இரண்டு ஆண்டுகள் தனது உயர் கல்வியைக் கற்று சுவிற்சலாந்தில் குடியேறினார். அங்கு சென்னை மாணவர் மன்றமும், மலேசிய தமிழ் இலக்கியக் கழகமும் இணைந்து நடாத்திய தமிழ்மணிப் புலவர் பட்டப்படிப்பில் மூன்றாண்டுகள் படித்து தமிழ்மணிப் பட்டம் பெற்றார்.
புகலிடத்தில் தமிழ் ஆசிரியராக தமிழ் கல்வித்துறையிலும் இலக்கியத்துறையிலும் பணியாற்றிவரும் இவர் சுவிற்சலாந்து லுசெர்ன் தமிழ்மன்ற பாடசாலையிலும், நூர்ன்பேர்க் தமிழாலயத்திலும் தமிழ் ஆசிரியராக பனியாற்றினார். பின்னர் நூர்ன்பேர்க் தமிழ் பாடசாலையை நிறுவி நடாத்திவருகின்றார். 1994ஆம் ஆண்டு பாரிஸ் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் விடியலைத் தேடும் பெண்புறா என்ற சிறுகதையை எழுதி பரிசு பெற்றார். லண்டன் ரி. பி. சி வானொலியில் கவிதைகள், இசையும் கதையும் ஆகியவற்றை எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1855 பக்கங்கள் 91-92